தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் பிரபல விளையாட்டு வீராங்கனை!!! அதுவும் எந்த படத்தில் நடிக்கிறார் என்று தெரியுமா!!?

0
30
#image_title

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் பிரபல விளையாட்டு வீராங்கனை!!! அதுவும் எந்த படத்தில் நடிக்கிறார் என்று தெரியுமா!!?

இந்தியாவுக்காக காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய வீராங்கனை ஒருவர் தமிழ் திரைப்படத்தில் நடிப்பதாக மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான வீராங்கனை பிராச்சி தெஹ்லான் அவர்கள்தான் தற்பொழுது தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் இந்தியாவுக்காக பெண்கள் கூடைப்பந்து அணியில் காமன் வெல்த் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கின்றார்.

விளையாட்டு வீராங்கனையான இவருக்கு எப்படியோ நடிப்பின் மீது ஆர்வம் வந்து பின்னர் ஹிந்தி மொழியியல் ஒழிபரப்பான ஒரு சீரியலில் நடித்தார். அந்த சீரியலில் சிறப்பாக நடிக்க இவருக்கு பட வாய்ப்பு குவியத் தொடங்கியது. பின்னர் பஞ்சாபி மொழியில் அர்ஜன், பைலாராஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

பின்னர் நடிகை பிராச்சி தெஹ்லான் அவர்களுக்கு மலையாளம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நடிகர் மம்மூட்டி அவர்கள் நடித்த மாமாங்கம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்திலும் நன்றாக நடிக்க தற்பொழுது தெலுங்கு திரைப்படத்தில் திரிசங்கு என்ற திரைப்படத்தில் தற்பொழுது பிராச்சி தெஹ்லான் அவர்கள் நடித்து வருகிறார்.

இதையடுத்து நடிகை பிராச்சி தெஹ்லான் அவர்கள் தற்பொழுது தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. அதாவது கே.டி குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பிராச்சி தெஹ்லான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.