ஏம்ப்பா ரீமேக் பண்றதுக்கு உங்களுக்கு இந்தியாவுல எதுவும் தேறலையா..? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல..?
சினிமாத்துறையில எல்லாமே ஒரு சீசன் மாதிரிதானே நடக்கும். பேய்ப்படம்னா பேய்ப்படமா வரும். காமெடிப் படம்னா காமெடிப் படம்னா தொடர்ந்து காமெடிப் படமா வரும். அந்த வரிசையில இப்போ சீஸன், வெப் சீரிஸ்தான். சமீபத்துல ‘தி இன்விசிபிள் கெஸ்ட்’ வெப் சீரிஸை ஹிந்தியில ‘பத்லா’ என்ற பேரில் ரீமேக் செய்தனர். அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் உருவான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அதைத்தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் வெப் சீரிஸ்களை ரீமேக் செய்யும் சீஸன் தொடங்கியிருக்கிறது. அந்த வரிசையில், ஸ்பானிஷ் மொழியில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான ‘மனி ஹைஸ்ட்’ என்கிற பிரபல வெப் சீரிஸை பாலிவுட் திரைப்படமாக்குகிறார் நடிகர் ஷாரூக் கான்.
தி ஃப்ரொஃபஸர்’ என்கிற கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடக்கும் கதை ‘மனி ஹைஸ்ட்’. இதுவரை வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய கொள்ளைச் சம்பவத்தை நடத்த வேண்டும் என்று திட்டமிடுகிறார் ‘தி ஃப்ரொஃபஸர்’. அவருக்கு உதவி செய்ய 8 நபர்களைத் தேர்ந்தெடுக்கிறார். ஸ்பெய்ன் நாட்டில் பணம் அச்சடிக்கும் இடத்தையே இவர்கள் குறி வைக்கிறார்கள். இவர்கள் திட்டம் என்ன ஆனது என்பதே கதை.
இந்தத் தொடரின் முதல் மூன்று சீஸன் மாபெரும் வரவேற்பைப் பெற்று தற்போது நான்காவது சீஸன் தயாரிப்பில் உள்ளது.
‘ஜீரோ’ படத்தின் தோல்விக்குப் பிறகு ஷாரூக் கான் சரியான கதையைத் தேடி வந்தார்.
அப்போதுதான் ‘மனி ஹைஸ்ட்’ பற்றி தெரியவந்துள்ளது. இந்தத் தொடரின் உரிமையை ஷாரூக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை தயாரிப்பதோடு, ‘தி ஃப்ரொஃபஸர்’ கதாபாத்திரத்தில் ஷாரூக் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெப் சீரிஸை எப்படி திரைப்படமாக மாற்றவுள்ளார்கள் என்று இப்போதிலிருந்து சினிமா ஆர்வலர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்
ஹூம்..இந்த சீஸன் எத்தனை நாளைக்கோ..?
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.