ஹிந்தியில் அறிமுகமாகும் பிரபல தமிழ் நடிகர்! மவுனப் படத்தில் நடிக்கிறார்!

Photo of author

By Parthipan K

ஹிந்தியில் அறிமுகமாகும் பிரபல தமிழ் நடிகர்! மவுனப் படத்தில் நடிக்கிறார்!

தமிழ் சினிமாவில் சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர் கதாநாயகனாக நடிப்பதற்கு முன் துணை நடிகராக நடித்து வந்தார்.சூது கவ்வும்,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களில் நகைச்சுவையில் கலக்கி இருப்பார் இவர்.

மேலும் காதலும் கடந்து போகும்,சேதுபதி,நானும் ரவுடிதான்,தர்மதுரை,விக்ரம் வேதா போன்ற படங்கள் இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தது.இவரின் தனித்தன்மை வாய்ந்த நடிப்பும்,நகைச்சுவையான உடல்மொழியும் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது.தொடர்ந்து பல படங்களை வெளியிட்டும்,வெளிவந்த அத்தனைத் திரைப்படங்களையும் வெற்றிப் படமாக அமைத்துக் கொடுத்தார் விஜய் சேதுபதி.

இவர் தன் ரசிகர்களுக்கு அதிக அன்பும் மரியாதையும் தருபவர்.தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நடிகராக தற்போது உள்ளார் விஜய் சேதுபதி.இதனிடையே வேற்று மொழிப் படங்களிலும் தற்போது நடிக்கத் தொடங்கியுள்ளார்.சாயிரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆனார்.

இவர் அடுத்து ஹிந்தி மொழியிலும் நடிக்க இருக்கிறார்.காந்தி டாக்ஸ் என்ற தலைப்பில் ஹிந்தியில் இவர் அறிமுகம் ஆகிறார்.இந்த திரைப்படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.ஹிந்தி இயக்குனரான கிஷோர் பாண்டுரங் பேலேகர் இந்த படத்தை இயக்குகிறார்.

மேலும் இந்தப் படத்தில் கதாநாயகியாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்க இருக்கிறார்.இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் நடிப்பதாக இருந்தது.ஆனால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.காந்தி டாக்ஸ் திரைப்படமானது மவுனப் படமாக வெளிவர இருக்கிறது.