Cinema

போலீசாரின் பல்லை உடைத்த  பிக்பாஸ் ஆரவின் கதாநாயகி! திரையுலகில் தொடரும் பரபரப்பு!

போலீசாரின் பல்லை உடைத்த  பிக்பாஸ் ஆரவின் கதாநாயகி! திரையுலகில் தொடரும் பரபரப்பு!

சமீபகாலமாக திரையுலகில் பல சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது. சென்ற ஆண்டு கூட தமிழ் பட கதாநாயகி ஆனா யாஷிகா மது அருந்திவிட்டு காரை வேகமாக ஓட்டி உள்ளார். மது போதையில் இருந்ததால் ரோட்டின் நடுவில் இருந்த கம்பத்தின் மீது காரை ஏற்றி உள்ளார். இதனால் காரின் உள்ளே இவருடன் இருந்த சக தோழர் மற்றும் தோழி பெரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு இவருடன் இறந்த தோழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இதற்கு அடுத்தபடியாக மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற தமிழ் படத்தில் நடித்த நடிகை காவியா தாப்பர்.இவர் இன்று அதிகாலை ஒரு மணிக்கு மது அருந்திவிட்டு காரை ஓட்டி சென்றுள்ளார். அவர் சென்றபோது இவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு அருகில் வரும்போது மதுபோதையில் இவரது கார் இவரது கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்ததால் இவரது கார் மற்றொரு காரின் பின்புறத்தில் வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து அங்கு இருந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்த பெண் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தார். அப்பொழுது காரில் இருந்த நடிகை காவியாவிடம் கேள்வி கேட்டுள்ளனர். இவர் பதிலளிக்க மறுத்து போலீஸ் அதிகாரி என்று கூட பாராமல் அந்த பெண் போலீசின் சட்டையையும் காலரை பிடித்து இழுத்து அவரை அடித்து உள்ளார். இந்த இருவரின் கைகலப்பில் போலீசாரின் பல் உடைந்தது. பிறகு போலீசார் நடிகை காவியா மீது வழக்கு பதிவு செய்தனர். பின்பு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment