அரசியலில் என்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்!!! ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு!!!

0
145
#image_title

அரசியலில் என்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்!!! ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு!!!

ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக இருக்கும் நடிகை ரோஜா அவர்களுக்கும் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மகன் ரெட்டி அவர்களுக்கும் ஆதரவாக நடிகை ரோஜா அவர்களின் கணவரும் இயக்குநருமான ஆர்.கே செல்வமணி அவர்கள் அரசியலில் இறங்கியுள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

தற்பொழுது ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாதுறை அமைச்சராக நடிகை ரோஜா அவர்கள் செயலாற்றி வருகிறார். இவருடைய கணவர் இயக்குநர் ஆர்.கே செல்வமணி அவர்கள் நடிகை ராஜாவுக்கு ஆதரவாக ஆந்திர அரசியலில் நேரடியாக களமிறங்கியுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குநர் ஆர்.கே செல்வமணி அவர்கள் ஆந்திர மாநிலத்தின் அரசியலில் நேரடியாக தலையிடாமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது அவருடைய மனைவியும் சுற்றுலாத்துறை அமைச்சருமான நடிகை ரோஜாவுக்கு ஆதரவாக அரசியலில் இறங்கியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் இயக்குநர் ஆர்.கே செல்வமணி அவர்கள் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது பேசிய இயக்குநர் ஆர்.கே செல்வமணி அவர்கள் “ஆந்திர மாநிலத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

ஆந்திர மாநிலத்தில் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றனர். மக்களின் மகிழ்ச்சி தொடர்பு வேண்டும் என்றால் ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தொடர்பு வேண்டும். ஜெகன் மகன் ரெட்டி அவர்கள் முதலமைச்சராக தொடர்பு வேண்டும்.

அதற்கு வரும் தேர்தலில் நீங்கள் அனைவரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து ஜெகன் மோகன் ரெட்டி அவர்களை வெற்றி பெற வைத்து மீண்டும் முதல்வராக்க வேண்டும்” என்று இயக்குநர் ஆர்.கே செல்வமணி அவர்கள் பேசினார்.

இதன் மூலமாக நடிகை ரோஜா அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய இயக்குநர் ஆர்.கே செல்வமணி அவர்கள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளார். இவரது இந்த திடீர் அரசியல் வருகை ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Previous articleஉடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு!!! பட்டாசு வெடித்து கொண்டாடிய விவசாயிகள்!!!
Next article2 பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நடிகர் ஷாரூக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து !!! ஒய்+ பாதுகாப்பு வழங்கிய மகாராஷ்டிரா அரசு!!!