போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் கைதானார்  பிரபல தமிழ் பட நடிகை!

Photo of author

By Parthipan K

நடிகை சஞ்சனா கல்ராணி தமிழில் ”ஒரு காதல் செய்வீர்” என்ற படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு  பரிச்சயமானார். அதன்பின் அவருக்கு தமிழில் அந்தளவிற்கு வாய்ப்பு கிடைக்காததால் கன்னட மொழி படத்தில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார்.

சமீபத்தில் கன்னட நடிகையான ராகினி திவேதி கைதான நிலையில்,கன்னட இயக்குனரான இந்திரஜித் லங்கேஷ் போதைப்பொருள் திரையுலகிலேயே வேரூன்றி நிற்கிறது என்றும் அது தொடர்பான 15 நடிகை நடிகர்களின் லிஸ்ட்களை போலீசாரிடம் ஒப்படைத்து விட்டார். 

தற்போது கன்னடத்தில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் பெரிய பாலிவுட் நட்சத்திரங்களுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டையும் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சஞ்சனா கல்ராணியின் நண்பன் ராகுல் போலீசாரால் கைது செய்யப்பட்டு ராகுல் அளித்த வாக்குமூலத்தின் பெயரில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் சஞ்சனா கைது செய்யப்பட்டார்.

தற்போது தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிக்கி கல்ராணியின் சகோதரிதான் சஞ்சனா கல்ராணி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் பல பிரபலங்கள் வரிசையாக  சிக்குவார்கள் என்று திரையுலகமே வீதியில் உறைந்துள்ளது.