இன்றுடன் முடியும் பிரபல விஜய்டிவி சீரியல்!!! சோகத்தில் மூழ்கிய சீரியல் ரசிகர்கள்!!!

Photo of author

By Sakthi

இன்றுடன் முடியும் பிரபல விஜய்டிவி சீரியல்!!! சோகத்தில் மூழ்கிய சீரியல் ரசிகர்கள்!!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஒன்று இன்றுடன்(செப்டம்பர்30) முடியவுள்ளது. இந்நிலையில் அந்த சீரியலில் ரசிகர்கள் அனைவரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

கல்லூரி சார்ந்த இளமை துள்ளும் கதைகளம், அழகிய ஜோடி, ரசிகர்கள் பெருமளவு கொண்டாடும் அளவிற்கு கதாநாயகி என்று எல்லாம் கலந்த கலவையான தொடராக விஜய் டிவி தொலைகாட்சியில் காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.

காற்றுக்கென்ன வேலி சீரியல் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்த சீரியலுக்கு ரசிகர்களின் வரவேற்பு குறைவு இல்லாமல் இருக்கின்றது. சீரியல் இயக்குநர் ரமேஷ் அவர்களின் இயக்கத்தில் காற்றுக்கென்ன வேலி விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

காற்றுக்கென்ன வேலி சீரியல் தொடங்கப்பட்ட பொழுது அரண்மனை கிளி தொடரில் நடித்த நடிகர் சூரியா தர்ஷன் அவர்கள் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு சில எபிசோடுகள் நடித்தார். ஆனால் சில காரணங்களால் அவர் இந்த தொடரில் இருந்து வெளியேற அடுத்து கதாநாயகானக சுவாமிநாதன் அனந்தராமன் என்பவர் நடிக்கத் தொடங்கினார். கதாநாயகனை மாற்றிய பொழுதும் காற்றுக்கென்ன வேலி தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கின்றது. நடிகை பிரியங்கா அவர்கள் வெண்ணிலா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்றுடன்(செப்டம்பர்30) காற்றுக்கென்ன வேலி தொடர்பு முடியவுள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுவரை வெற்றிகரமாக 809 எபிசோடுகள் ஓடிய நிலையில் இன்றுடன் சீரியல் முடிந்துள்ளது.

இறுதி எபிசோடில் வெண்ணிலா அவர்கள் குற்றம் செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்படுகிறார். இதையடுத்து அவர் தனது ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆனதாக தொடர் முடிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் சோகத்தில் அனைத்து ரசிகர்களும் சீரியலை முடிக்க கூடாது என்றும் இன்னும் பரபரப்பான கதைக்களங்களுடன் சீரியலை தொடரவேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.