ஏழுமலையானை சந்திக்க ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசை!!! தரிசனத்திற்காக 32 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!!!

0
96
#image_title

ஏழுமலையானை சந்திக்க ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசை!!! தரிசனத்திற்காக 32 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!!!

திருப்பதி ஏழுயலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று 32 மணி நேரத்திற்கு பிறகு சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, பள்ளி விடுமுறை என்று அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் மக்கள் அனைவரும் சுற்றுலா செல்லத் தெடங்கியுள்னர். இதையடுத்து உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறை காரணமாக மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது.

திருப்பதியில் எழுமலையானை சந்திக்க வரும் பக்தர்களில் பெரும்பாலும் பொது தரிசனம் மூலமாக சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு பக்தர்கள் இந்த முறை பொது தரிசனத்தில் சுமார் 7 காலை மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று 32 மணி நேரத்திற்கு பிறகு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதியில் உள்ள தங்கும் அறைகள் முழுவதும் நிரம்பி இருப்பதால் பக்தர்கள் அனைவரும் தேவஸ்தான மண்டபங்கள், சொந்த வாகனங்கள், கிடைக்கும் இடங்கள் என்று அனைத்து இடங்களிலும் தங்கி வருகின்றனர். திருப்பதியில் உள்ள பார்க்கிங் இடங்கள் முழுவதிலும் வாகனங்கள் நிரம்பி வழிகின்றது. இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது. பொது தரிசனத்தில் நாள் கணக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படையான வசதிகளை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகின்றது. பொது தரிசன வழியில் கூட்டம் நிரம்பி வருவதை போலவே கட்டண தரிசன வழிகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.