பிரைவஸியை வெளிப்படுத்திய ரசிகர்… கடுப்பான கோலியின் ரியாக்‌ஷன்!

0
235

பிரைவஸியை வெளிப்படுத்திய ரசிகர்… கடுப்பான கோலியின் ரியாக்‌ஷன்!

கோலியின் ஹோட்டல் அறையை ரசிகர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட அது இணையத்தில் வைரல் ஆனது.

இன்றைய தேதியில் உலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட் வீரர் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கோலி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தாக்கம் செலுத்தும் ஒரு வீரராக கோலி இருக்கிறார். சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடி அவர் ரன்களைக் குவித்து வருகிறார்.

இந்நிலையில் கோலி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவும் அது சம்மந்தமான ஆதங்கமான பதிவும் கவனத்தை ஈர்த்துள்ளன. ரசிகர் ஒருவர் கோலி தங்கியுள்ள ஹோட்டல் அறையை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

அதுகுறித்து கோலி “ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் அவர்களைச் சந்திப்பதில் உற்சாகம் அடைகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள், நான் அதை எப்போதும் பாராட்டுகிறேன். ஆனால் இங்குள்ள இந்த வீடியோ பயங்கரமானது மற்றும் இது எனது தனியுரிமையைப் பற்றி மிகவும் சித்தப்பிரமையாக உணர வைத்தது.

எனது சொந்த ஹோட்டல் அறையில் தனியுரிமை இருக்க முடியாவிட்டால், அப்படியானால், தனிப்பட்ட இடத்தை நான் எங்கே எதிர்பார்க்க முடியும்? இந்த வகையான வெறித்தனம் மற்றும் தனியுரிமையின் முழுமையான ஆக்கிரமிப்புடன் நான் சரியில்லை. தயவு செய்து மக்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கவும், அவர்களை பொழுதுபோக்கிற்கான பொருளாக கருத வேண்டாம்.” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Previous articleசகாப்தம் சுட்டு கொல்லப்பட்ட பின்னனி! தனது இறப்பை முன்கூட்டியே அறிந்த இந்திராகாந்தி!
Next articleஅமுல் கேரக்டருடன் நடை போடும் ரிஷி சுனக்! வாழ்த்தும் நெட்டிசன்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here