ஐபிஎல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி! இருப்பினும் இதை செய்திருக்க வேண்டும்!!

Photo of author

By Parthipan K

ஐபிஎல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி! இருப்பினும் இதை செய்திருக்க வேண்டும்!!

இந்த முறை ஐபிஎல் தொடரில் வழக்கமாக விளையாடும் அணிகளுடன் கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது.

அதன்பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டு அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 வீரர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ஏலம் விடப்பட்டனர். அந்த வகையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் மொத்தமாக ஏலம் விடப்பட்ட 600 வீரர்களில் 204 பேர் விற்கப்பட்டனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல், இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என தெரிவித்திருந்தார். மேலும், நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரின் முதற்கட்ட போட்டிகளில் நாற்பது சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும்  பிரிஜேஷ் படேல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் குறித்த புதிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகி உள்ளது. ஐ.பி.எல். அணிகள் வருகிற 14 அல்லது 15-ந் தேதியில் இருந்து பயிற்சியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஐ.பி.எல் போட்டியை நேரில் பார்க்க கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 25 சதவீத ரசிகர்களை அனுமதிக்க மராட்டிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.