தன் தந்தையின் இறப்பில் கைதட்டி ஆர்ப்பரித்த ரசிகர்கள்!! மனம் உடைந்த நடிகர் பிரித்திவிராஜ்!!

Photo of author

By Gayathri

தன் தந்தையின் இறப்பில் கைதட்டி ஆர்ப்பரித்த ரசிகர்கள்!! மனம் உடைந்த நடிகர் பிரித்திவிராஜ்!!

Gayathri

Fans applauded and cheered on his father's death!! Heartbroken actor Prithviraj!!

2002 ஆம் ஆண்டு நந்தனம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் பிரித்விராஜ் அவர்கள். இவர் மட்டுமின்றி இவருடைய குடும்பத்தில் அனைவருமே திரையுலகில் பணியாற்றியவர்கள். மலையாளத்தில் தோன்றிய இவர் அதன் பின் கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வெள்ளனாக இயக்குனர் கே வி ஆனந்த் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரக்கூடிய பிரித்திவிராஜ் அவர்கள் சமீபத்தில் தன்னுடைய தந்தையினுடைய இறப்பு குறித்தும் அங்கு நிகழ்ந்த சோகமான விஷயங்கள் குறித்தும் மனம் உடைந்து பேசியிருப்பதாவது :-

என் வீட்டில் சாதாரண குழந்தைகளை பெற்றோர் வளர்ப்பது போல தான் அன்பாக வளர்த்தனர் என்றும் என்னுடைய குழந்தை பருவம் மிக மிக அழகானதாக இருந்தது என்றும் தெரிவித்திருக்கிறார். எப்பொழுதுமே ஒரு பிரபலம் இறந்துவிட்டார் என்றால் அவருடைய உடலை பொதுவெளியில் வைப்பது தனக்கு கொஞ்சம் கூட படிக்காத எனக் கூறியவர் தன்னுடைய தந்தை இறப்பிலும் தனக்கு பிடிக்காத விஷயம் நிகழ்ந்ததாக கூறியிருக்கிறார்.

அதாவது, தன்னுடைய தந்தை இறந்த பொழுது தான் மிகப்பெரிய சோகத்தில் இருந்ததாகவும் அப்பொழுது தன் தந்தையின் உடலை காண நடிகர் மோகன் லால் அங்கு வந்ததாகவும் அவர் வந்த பொழுது அவருடைய ரசிகர்கள் அவரை கைத்தட்டி ஆர்ப்பரித்து கொண்டாடினார்கள் என்றும் தெரிவித்த பிரித்திவிராஜ், அந்த தருணத்தில் அங்கு என்னுடைய அப்பா இறந்து கிடக்கிறார் ஆனால் ரசிகர்களோ என் அப்பாவின் உடலை காண வந்த நடிகரை கொண்டாடுகின்றனர் எனக்கு இது மிகவும் கஷ்டமான ஒரு சூழலாக அமைந்தது என தெரிவித்திருக்கிறார்.

ஏன் ரசிகர்களின் உடைய மனநிலையானது இவ்வாறு இருக்கிறது என கேள்வி எழுப்பியதோடு தனக்கு நிஷத்தில் அழுவது மிகவும் கடினமான ஒரு செயல் என்றும் கேமராவிற்கு முன் ஆக்ஷன் என்று சொன்னவுடன் வரக்கூடிய அழுகையானது உண்மையில் என்னால் நினைத்தால் கூட அழ முடியவில்லை என்றும் என் தந்தையுடைய இறப்பில் நிகழ்ந்த இந்த நிகழ்வானது என்னை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது என்றும் மனம் உடைந்து தெரிவித்திருக்கிறார்.