தற்பொழுது மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் ஆனது மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில் வெற்றி விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது தனியார் youtube சேனல் ஒன்று குடும்பஸ்தன் திரைப்படத்திற்காக மணிகண்டனுக்கு விருது வழங்கியிருக்கிறது. அப்பொழுது அங்கு ரசிகர்கள் மணிகண்டனிடம் கேட்ட கோரிக்கையை மணிகண்டன் முடியாது என மறுக்கவே அங்கு நடந்த சுவாரசியமான விஷயங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
குடும்பஸ்தன் திரைப்படத்திற்காக நடிகர் மணிகண்டன் அவர்களுக்கு விருது வழங்கிய பின்பு அந்த விழாவில் தொகுப்பாளியாக மணிமேகலை அவர்களும் கே பி ஒய் பாலா அவர்களும் மணிகண்டன் அவர்களிடம் தேன் சுடர் பாடல் உருவான விதம் குறித்து கேட்டிருக்கின்றனர். அதற்கு பதில் அளித்தால் நடிகர் மணிகண்டன் அவர்கள் முதலில் பாடலின் உடைய காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாகவும் அதன் பின்பு தான் பாடல் உருவாக்கப்பட்டு இரண்டையும் இணைத்து பார்க்கும் பொழுது பிரமிப்பாக இருந்தது என்றும் பதிலளித்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து ரசிகர்களின் உடைய வேண்டுகோளை நிறைவேற்றும் படி கே பி ஒய் பாலா கேட்க, தயங்கியபடியே வேண்டாம் என மணிகண்டன் மறுத்திருக்கிறார். விடாமல் தொடர்ந்து ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருக்கவே மணிகண்டன் அவர்கள் இப்பொழுது மிமிக்ரி செய்ய சொல்லி கேட்பீர்கள் அதன் பின்பு வீடியோவில் பார்த்துவிட்டு உன்னை எல்லாம் யார் மிமிக்ரி செய்ய சொன்னது என கமெண்ட் செய்வீர்கள் என கேட்டதும், நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம் மிமிக்கிரி செய்யுங்கள் என்ற முழக்கம் அதிகரித்துக் கொண்டே செல்ல மெய்சிலிர்த்த மணிகண்டன் அவர்கள் தன்னுடைய ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மிமிக்ரி செய்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக பிதாமகன் படத்தில் சூர்யா பேசக்கூடிய வசனத்தை மிமிக்கிரி செய்து அந்த அரங்கத்தையே அதிரவிட்டிருக்கிறார் மணிகண்டன். அவருடைய மிமிக்ரி ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்ததோடு திரை பிரபலங்களையும் வாயடைத்துப் போக செய்திருக்கிறது.