துணிவு ஷூட்டிங்கால் சென்னையில் டிராபிக்… அஜித்துன்னு நம்பி வந்து ஏமாந்த கூட்டம்!
அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்துக்கு ‘துணிவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்துக்காக தாய்லாந்தில் இறுதிகட்ட ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதோடு படத்தின் அனைத்துக் காட்சிகளும் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ஒரு சில பேட்ச் காட்சிகள் மட்டும் படமாக்க பட வேண்டியுள்ளதாம்.
இதற்காக நேற்று சென்னை அண்ணாசாலையில் ஒரு இடத்தில் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். அதில் அஜித் கலந்துகொண்டுள்ளதாக நினைத்து ரசிகர்கள் கூடியதால் அந்த இடம் முழுவதும் ட்ராபிக் ஜாம் ஆகியுள்ளது. ஆனால் உண்மையில் இந்த ஷூட்டிங்கில் அஜித் கலந்துகொள்ளவே இல்லையாம். சொல்லப்போனால் அஜித் இன்னும் தாய்லாந்தில் இருந்து வரவே இல்லையாம்.
இதற்கிடையில் அஜித்தைப் பற்றி மற்றொரு தகவலும் பரவி வருகிறது. அஜித், லைகா நிறுவனம் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை முடித்துவிட்டு அஜித் அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு எந்த படத்திலும் நடிக்க போவதில்லையாம். ஏனென்றால் அஜித் சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாராம்.