முருகதாஸுக்கு இதே வேலை தான்! கடுப்பான ரசிகர்கள்

Photo of author

By Parthipan K

முருகதாஸுக்கு இதே வேலை தான்! கடுப்பான ரசிகர்கள்

ஒரு வசனத்தை வைப்பதும் பிறகு பிரச்சனை வந்தால் அதை நீக்குவதும் இதுவே முருகதாஸூக்கு வேலையாக இருக்கிறது என ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தர்பார் படத்தில் சிறையில் செல்போன் உபயோகிப்பது சம்மந்தமான காட்சி ஒன்றில் ’இது என்ன சிறையில் இருந்த படி ஷாப்பிங்கே செய்யலாம்’ என ஒரு வசனம் வரும். இதற்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க அந்த வசனம் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கே இவ்வளவு அதிகாரமா என வியந்துள்ளனர். இதுபற்றி குறிப்பிட்ட கமல் வசனத்தை நீக்க வைத்ததும் ஒரு வகையான ஷாப்பிங்தான் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் முருகதாஸ் படத்தில் இதுபோல் ஒரு வசனம் வைக்கப் படுவதும் பின்பு பிரச்சனையானதும் அதை நீக்குவதும் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே ஏழாம் அறிவு படத்தில் இதுபோல் ஒரு வசனத்தை பிரச்சனை வந்ததும் அவர் நீக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் கத்தி திரைப்படத்தின் நடிகர் விஜய் 2 ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி குறிப்பிடும் போது காற்றில் ஊழல் ஊழல் செய்த ஊர் நம்மூர் என்று திமுக எம்பி ஆ ராசாவைப் பற்றி குறிப்பிடுவார். ஆனால் உண்மையில் இப்போது ஆ ராசா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விட்டார்.

இதனால் பரபரப்புக்காக ஒரு வசனத்தை வைத்து அதன் பின்பு பிரச்சினை வந்ததும் அதை நீக்குவது முருகதாசுக்கு ஒன்றும் புதிதல்ல எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அவர் படங்களில் அவர் சமூகப் பிரச்சினைகளை கதைக்களமாக கொன்றாலும் அவற்றுக்கு சொல்லும் தீர்வுகள் மிகவும் முட்டாள்தனமானது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.