குட் பேட் அக்லிக்கு டிக்கெட்டே கிடைக்காது!.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!..

0
14
good bad ugly

விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் அடுத்து வரும் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. ஏனெனில், இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது டிரெய்லர் வீடியோ வெளியாகி டபுள் டமாக்காவாக அமைந்திருக்கிறது. ஏனெனில், டீசரில் அமைந்ததை விட பல மடங்கு மாஸான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது.

மேலும், தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களிலும் வந்த அஜித்தின் லுக்கை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும், ‘அவன் பயத்துக்கே பயம் காட்டுறவன்’ என பிரபுவும் பில்டப் ஏத்துகிறார். குட் பேட் அக்லி படம் வருகிற 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

பட ரிலீஸுக்கு 4 நாட்கள் முன்பே ஆன்லைன் புக்கிங் துவங்கியுள்ளது. ஆனால், 80 சதவீத டிக்கெட்டுக்கள் கார்ப்பரேட் கம்பெனிகளால் ஏற்கனவே புக் செய்யப்பட்டு விட்டதால் பலருக்கும் டிக்கெட் கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். மீதமிருக்கும் டிக்கெட்டுகளையும் பிய்த்து பிய்த்து கார்ப்பரேட் கம்பெனிகளாலே வாங்கி கொண்டதால் முதல் 4 நாட்களுக்கு ரசிகர்களுக்கே டிக்கெட் கிடைக்காது என்கிறார்கள். அனேகமாக இதுபற்றி அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleதிரைக்கு இயக்குனர் போல அரசியலில் விஜய்க்கு பக்கபலமாக நிற்கும் மும்மூர்த்திகள்
Next articleபேச்சுரிமையை குற்ற வழக்கால் தடுக்க முடியாது – சி.வி. சண்முகம் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு