ஐஸ்வர்யா ராய்:
பிரபல பாலிவுட் சினிமா நடிகை ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு ஆரத்யா பச்சன் என ஒரு மகள் இருக்கிறார் .
இதனிடையே கடந்து சில நாட்களாக இருவரும் விவாகரத்து செய்யப் போவதாகவும் செய்து விட்டதாகவும் விதவிதமான செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது,. ஆனால் அவர்களோ அதை உறுதிப்படுத்தவில்லை. மாறாக நாங்கள் நன்றாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறைமுகமாக தெரிவித்தார்கள் .
விவாகரத்து வதந்தி:
அடிக்கடி ஐஸ்வர்யாராய் தனது மகளுடன் தனிமையில் அவுட்டிங் சென்று வருவதை விவாகரத்து செய்திகள் உறுதி செய்தது. இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் அபிஷேக் பச்சன் அண்மையில் தனது 49வது பிறந்த நாளை நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கொண்டாடினார்.
திண்டாட வைத்த முத்தம்:
அப்போது பிரபல பாலிவுட் சினிமாவில் நடன இயக்குனர் அபிஷேக் பச்சனை கட்டியணைத்து மாறி மாறி முத்தம் கொடுத்தார். ஒரு கட்டத்தில் அபிஷேக் பச்சன் அவரின் முத்தத்தில் திண்டாடி போனார்.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கும் ஃபரா கான் ” நான் செய்வது பிடிக்காத மாதிரியே அபிஷேக் பச்சன் எப்போதும் இருப்பார். ஆனால், அவருக்கு அது பிடிக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். பரபரப்பாக பேசப்பட்டு வரும் சமயத்தில் இவர்களின் இந்த மொத்த விவகாரம் வித்தியாசமான கோணத்தில் பார்க்கப்பட்டு வருகிறது.