கட்டணம் உயர்வு!! மெட்ரோ அறிவித்த ஷாக் நியூஸ்!!
மெட்ரோ நிர்வாகம் பார்க்கிங் செய்வோர்க்கு கட்டணத்தை உயர்த்தி புதிய அறிவிப்பு ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் மெட்ரோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 67 லட்சத்தை தாண்டி உள்ளது.
தினசரி மெட்ரோ பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி தினசரி 2.5 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். ஒரு காலத்தில் தினசரி 10,000 நபர்கள் மட்டுமே பயணம் செய்தனர்.
மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்தும் விதமாக மெட்ரோ நிர்வாகம் பயணம் செய்யாமல் பார்க்கிங் மட்டும் செய்யும் நபர்களுக்கு ஜூன் 14-ம் தேதி முதல் பார்க்கிங் கட்டணம் 6 மணி நேரத்திற்கு ரூ.20 என்றும், 12 மணி நேரத்திற்கு ரூ.40 என்றும் அதற்கு மேல் ரூ.40 என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த கட்டணம் பார்க்கிங்-க்கு மட்டுமே என்றும் பயணம் செய்வோருக்கு அதே கட்டணம் தொடரும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மக்கள் அதிக அளவில் மெட்ரோ பயன்படுத்துவதற்காக இந்த புதிய செயல்பாட்டை அறிவித்துள்ளது.
மேலும் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ரூ.2800 கோடி செலவில் புதிய திட்டத்தை கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக பார்க்கிங்-ற்கு கட்டண உயர்வு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
தினசரி பயனாளர்களின் எண்ணிக்கை உயர்வதை கொண்டு புதிய ரயில்கள் கொண்டு வருவது குறித்தும் முடிவு செய்துள்ளது.