மொபட் மீது மினி லாரி மோதியதில் விவசாயி பலி!

0
153

மொபட் மீது மினி லாரி மோதியதில் விவசாயி பலி!

ராயக்கோட்டை கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா என்பவர்.இவர் விவசாயம் செய்து வருகின்றார்.
கிருஷ்ணப்பா நேற்றுமுன்தினம்
பைரமங்கலம் -ஓசூர் சாலையில் அவருடைய மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று கிருஷ்ணாப்பாவின் மொபட் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் கிருஷ்ணப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கெலமங்கலம் காவல்துறையினர் கிருஷ்ணாப்பாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleநகைச் சீட்டில் மோசடி செய்த பிரபல நகைக்கடை:! பணத்தைக் கொடுத்துவிட்டு பரிதவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்!
Next articleஅமைச்சர் தங்கமணி மக்களுக்கு கொடுத்த உறுதிமொழி!