சூறையாடும் விவசாயிகளின் உயிர்…??திருப்பூர் அருகே நடந்த பரிதாபம்??

0
115

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டடம் பகுதியில் உள்ள குழந்தைபாளையத்தை சார்ந்தவர் ராஜாமணி என்னும் விவசாயி (வயது 55). இவர் தாராபுரத்தில் இயங்கி வரும் ஆக்சிஸ் பேங்க் கிளை வங்கியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ரூ.11 லட்சம் விவசாய கடன் வாங்கியுள்ளார்.

இந்த கடன் தவணைத் தொகையை முறையாக செலுத்தி வந்தார் விவசயி ராஜமணி. ஆனால் கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட வறட்சி காரணமாக விவசாயம் சரிவர செய்ய முடியமல் போனது.விவசாயம் செய்து விளைச்சலில் வரும் பணத்தை மட்டும் நம்பி இருந்த விவசாயி, விவசாயம் நடைபெறாமல் போனதால் கடன் தவணைத் தொகையை சரிவர செலுத்த இயலாமல் தவித்து வந்துள்ளார்.

இந்த சூழலில், வங்கியின் கடன் வசூல் செய்யும் அதிகாரிகள் விவசாயி ராஜாமணியின் வீட்டிற்குச் சென்று கடன் தொகையை கட்ட சொல்லி வற்புறுத்தி வந்தனர். இதனால் ராஜாமணி கடந்த சில நாட்களாக கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில்,நேற்று தோட்டத்தில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் விஷ மாத்திரையை உட்கொண்டு தோட்டத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.இவரை கண்ட ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்து, அவரை கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக விவசாயி உயிரிழந்துள்ளார். இந்த சமபவத்தை வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகொள்ளை முயற்சியின்போது தீப்பிடித்த ஏ.டி.எம்! ராசிபுரம் அருகே பரபரப்பு
Next articleதமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்