பிஎம் கிசான் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகளே எச்சரிக்கை! நாளையே கடைசி நாள் முந்துங்கள் இல்லையெனில் பணம் கிடையாது!
மத்திய அரசானது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது. அந்த வகையில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணையாக பிஎம் கிசான் திட்டத்தின் மூலமாக 6000 ரூபாய் வழங்கி வருகின்றது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுகின்றது.
இந்த திட்டத்தின் மூலம் ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல்1 முதல் ஜூலை 31 வரையிலும், இரண்டாவது தவணையாக ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரை அதனையடுத்து மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
மேலும் தற்போது வரை 12 தவணை பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 13 வது தவணை பணம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வர உள்ளது. இந்த தவணை ஹோலி பண்டிகைக்கு முன்பாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரும் என எதிர்பார்க்கபடுகின்றது.
பிஎம் கிசான் திட்டத்தில் பயன் அடையும் விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்குகளின் இ-கேஒய்சி சரிபார்ப்பை நாளைக்குள் முடிக்க வேண்டும். இல்லையெனில் 13 வது தவணை வங்கி கணக்கிற்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் உடனடியாக விவசாயிகள் 13 வது தவணை வங்கி கணக்கிற்கு வர விரும்பினால் இ-கேஒய்சி அப்டேட்டில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மேலும் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்கவில்லை என்றால் பணம் கிடைக்க வாய்ப்பில்லை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.