விவசாயிகளின் உண்ணா விரத போராட்டம்! செவிசாய்க்குமா மத்திய அரசு!

Photo of author

By Rupa

விவசாயிகளின் உண்ணா விரத போராட்டம்! செவிசாய்க்குமா மத்திய அரசு!

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே தற்போது போர் கொடிகள் உயர்ந்துள்ளது. அது என்னவென்றால் கால காலமாக இருக்கும் காவேரி நீர் பிரச்சனை தான்.உச்ச நீதிமன்றமோ மேகதாது அணை கட்டப்படுமானால் காவிரியின் கீழ் படுகையில் இருக்கும் மாநிலங்களின் உத்தரவை கேட்கவேண்டும் என்று ஆணையிட்டது.கர்நாடக அரசு இந்த ஆணைக்கு சிறிதளவும் செவிசாய்க்கவில்லை.தற்பொழுது அங்கு அணை கட்டப்பட்டு விட்டால் டெல்டா  விவசாயிகளுக்கு பெரும் அளவு பாதிப்பாக இருக்கும்.இதனால் முதல்வர் தொடர்ந்து மத்திய அரசிடம் அணை கட்டுவதை தடுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.

டெல்டா விவசாயிகள்கூறியதாவது,தமிழக முதல்வர் நாம் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் யாரென்று காட்டவேண்டும் என கூறுகிறார்.ஆனால் ஒருபோதும் எங்களை அழைப்பது இல்லை தொடர்ந்து  புறக்கணித்து விடுகிறார்.இந்த காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் முழு உரிமை உள்ளது காவேரி என்பது வாழ்வுரிமை என இவ்வாறெல்லாம் முதல்வர் கூறுகிறார்.ஆனால் தமிழக விவசாயிகளை முதல்வர்  இணைத்து கொள்ளாததால் அவர்கள் முதல்வருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தஞ்சையில்,விவசாயிகளின் சக தலைவரான பி.ஆர் பாண்டியன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தின் நோக்கமானது காவிரி மேகதாது அணை கட்டுவதை தடுப்பதுதான்.தற்போது மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களும் பாதிக்கப்படுவர்.மேலும் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்களளும் பாதிப்பிற்குள்ளாகும்.தமிழகத்தில் இந்த 32 மாவட்டங்களிலும் பெருமளவு பாதிப்பை உண்டாக்கும் எனவே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி உண்ணா விரத போராட்டம் நடந்து வருகிறது.