விவசாயிகளே.. இந்த ஒரு ஆவணம் இருந்தால் ரூ.1,20,000 வரை  அரசிடம் கடனுதவி கிடைக்கும்!!

Photo of author

By Rupa

 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்,பால் உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.அதன்படி தமிழகத்தில் உள்ள பால் விவசாயிகளுக்கு கறவை மாடு வாங்க கடனுதவி வழங்கப்படுகிறது.

இது தவிர ஆடு,கோழி,மீன் வளர்ப்பிற்கும் அரசிடம் இருந்து நிதியுதவி கிடைக்கும்.கறவை மாடுகள் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.அதேபோல் 50 சதவீத மானியத்துடன் 100 முதல் 500 ஆடுகள் வரை வளர்க்க கடனுதவி வழங்கப்படுகிறது.200 ஆடுகள் வாங்க ரூ.40 லட்சமும்,500 ஆடுகள் வாங்க ரூ.1 கோடி வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது.

கறவை மாடுகள்,ஆடுகள் உள்ளிட்ட கால்நடை வளர்ப்பிற்கு கடனுதவி வாங்க தங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.கறவை மாடு வாங்க ரூ.1,20,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது.ஒரு கறவை மாடு வாங்க ரூ.60,000 வரை வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட பொருளாதார மேம்பாடு கழக லிமிடெட் சார்பில் அறிமுகப்படுத்தபட்டுள்ள இந்த திட்டத்தின் மெல்லாம் கறவை மாடு வாங்க கடன் உதவி கிடைக்கும்.பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள பயனாளி ஒருவருக்கு அதிகபட்சம் இரண்டு கறவை மாடு வாங்க கடனுதவி வழங்கப்படுகிறது.

கறவை மாடு வாங்க பெற்ற கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும்.இக்கடனிற்கு 7% வரை வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடன் பெற தகுதிகள்:

பிற்படுத்தப்பட்டுடோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆண்டு வருமானம் ரூ.3,00,000க்கு கீழ் இருக்க வேண்டும்.18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் அப்ளை செய்து பயன்பெற முடியும்.குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தில் கடனுதவி வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

1)வருமான சான்றிதழ்

2)சாதி வருமானம்

3)பிறப்பிட சான்றிதழ்