துப்பாக்கிச் சூடுகளில் விவசாயிகள் பலி.! அவர்களின் நினைவு தினம் இன்று!!

துப்பாக்கிச் சூடுகளில் விவசாயிகள் பலி.! அவர்களின் நினைவு தினம் இன்று!!

தமிழகத்தில் வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது தற்போதைய அச்சம். இந்த இலவச மின்சாரம் ஒன்றை  பெறுவதற்கு தமிழகம் நடத்திய போராட்டங்களை கீழே பார்க்கலாம்.அன்றைய தமிழக அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு எட்டு பைசாவிலிருந்து பத்து பைசாவாக உயர்த்தி அறிவித்தது.இதனால் கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.

மேலும்  பல்லாயிர கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களை பேரணியாக கொண்டு சென்றனர். இந்த போராட்டத்தினால் நகரமே அதிர்ந்தது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெறவிட்டால் அலுவலகம் முன்பு சாலை போராட்டமும் நடத்தப்படும் என விவசாயிகள் முற்றுகையிட்டனர். போராட்டத்தின் உச்ச கட்டத்தில் அநியாயமாக மூன்று விவசாயிகள் உயிரை பறித்தது இந்த அரசாங்கம்.

கொந்தளித்த விவசாயிகள் அந்த நகரையே உலுக்கி எடுத்தனர். இதைதொடர்ந்து  போராட்டத்தினை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 46 விவசாயிகள் பலியானார்கள். இதில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த  15 வயது இளைஞர் உட்பட எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாக பேரூராட்சி அலுவலகம் முன்பு வீரக்கல்நட்டு வைக்கப்பட்டுள்ளது.

நினைவு வீரக்கல் முன்பு உயிரிழந்தோரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த தியாகிகளினால் தான் இலவச மின்சாரம் என்ற உரிமை நமக்கு கிடைத்தது. அதுவும் இன்று பறிப்போகின்ற நிலைமையில் தான் செல்கிறது.

Leave a Comment