எட்டு வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் மொட்டையடித்து நூதனமான முறையில் போராட்டம்:

Photo of author

By Parthipan K

எட்டு வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் மொட்டையடித்து நூதனமான முறையில் போராட்டம்

சேலத்திலிருந்து சென்னைக்கு செல்ல விரைவுச் சாலையான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு திருவண்ணாமலை, தருமபுரி சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மக்கள் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். ஆனால் மக்கள் தொடர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.இருப்பினும் மத்திய மற்றும் மாநில அரசு இடைவிடாது எட்டு வழி சாலையைமைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இதனால் எட்டு வழி சாலைக்கு நில ஆக்கிரமிப்பு நடந்து வருவதால் ,விவசாய நிலங்கள், ஏரிகள் ,குளங்கள் ஆகிய இயற்கையை அளித்துவரும் எட்டு வழி சாலை வேண்டுமா? விவசாயிகள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பினர். நில ஆக்கிரமிப்புக்கு எதிராக விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அம்மனும் இன்னும் நிலுவையில் உள்ளது. இருப்பினும் நில ஆக்கிரமிப்பு நடந்து வருவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

இதனால் திருவண்ணாமலை மாவட்டம் நரசிங்கநல்லூர் கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் இணைந்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.மேலும் இவர்கள் நீர்நிலைகள் கிணறு குளம் உள்ளிட்ட இயற்கை வளங்களை அழித்து வரும் எட்டு வழி சாலை வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.இதே போன்ற தர்மபுரி மாவட்டத்திலும் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

நில ஆக்கிரமிப்பை கண்டித்து பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.இதனால் விவசாயிகள் மொட்டையடித்து நூதனமான முறையில் அவர்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இத்திட்டம் நிறைவேற்றினால் பல கிராமங்கள் மற்றும் இயற்கை வளங்களை அழிக்கும் அபாயம் அதிகமாக உள்ளதாக விவசாயிகள் எச்சரித்தனர்.