விவசாயிகளே உடனே முந்துங்கள்!! ரூ.12,500 மானியம் கிடைக்க உடனே அப்ளை செய்யுங்கள்!! 

Photo of author

By Divya

விவசாயிகளே உடனே முந்துங்கள்!! ரூ.12,500 மானியம் கிடைக்க உடனே அப்ளை செய்யுங்கள்!!

தமிழகத்தில் கரும்பு சாகுபடியை அதிகரிக்க ஊக்கத்தொகை,மானிய விலையில் கரும்பு அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்டவைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.அதேபோல் கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் பருசீவல் நாற்று கொண்டு நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.12,500 வழங்கப்படும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

தருமபுரி மாவட்டம் கடந்த 2023-2024 ஆம் ஆண்டு 10.10% சர்க்கரை கட்டுமானம் அடைந்து மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ள நிலையில் கரும்பு மகசூலை ஊக்குவிக்கும் விதமாக அம்மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்றும் ஆலைக்கு பதிவு செய்யாத அங்கத்தினர்கள் அனைவரும் வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென்றும் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில்,

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2023-24 ஆம் ஆண்டு அரவை பருவத்தில் 137778 மெ.டன் கரும்பு அரவை செய்யப்பட்டு 10.10% சர்க்கரை கட்டுமானம் அடைந்துள்ளது.சர்க்கரை கட்டுமானத்தில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் 2023-24 நடவு பருவத்திற்கு இது வரை சுமார் 3000 ஏக்கர் கரும்பு ஆலை அரவைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு பதிவு செய்துள்ள கரும்பிற்கு சர்க்கரை கட்டுமானம் 10.10% அடிப்படையில் ஆலை மெ.டன் ஒன்றிற்கு ரூ.3350/- மற்றும் தமிழ் நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகை மெ.டன் ஒன்றிற்கு ரூ.215/-, ஆக மொத்தம் கரும்பு மெ.டன் ஒன்றிற்கு ரூ.3,565 கிடைக்க உள்ளது.

மேலும் கரும்பு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பருசீவல் நாற்று கொண்டு நடவு செய்யும் விவசாய அங்கத்தினர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.12,500, ஒரு பரு கரணை கொண்டு நடவு செய்யும் விவசாய அங்கத்தினர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.3750/-,திசு வளர்ப்பு நாற்றுக்கு,நாற்று ஒன்றுக்கு ரூ.6/- மானியமாக வழங்கப்படுகிறது.இதுவரை ஆலைக்கு பதிவு செய்யாத அங்கத்தினர்கள் அனைவரும் வரும் 30.06.2024 அன்றுக்குள் பதிவு செய்து, ஆலை நல்ல முறையில் இயங்க ஒத்துழைப்பு தர வேண்டுமென்று கரும்பு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி இருக்கிறார்.