இந்த மாதம் விரதம் அடுத்த மாதம் கல்யாணம்! அப்படி என்ன ஸ்பெஷல் இந்த மாதத்தில்?

Photo of author

By Rupa

இந்த மாதம் விரதம் அடுத்த மாதம் கல்யாணம்! அப்படி என்ன ஸ்பெஷல் இந்த மாதத்தில்?

பங்குனி உத்திரம் என்பதற்கு மற்றொரு பெயரும் உண்டு அது தான் கல்யாண விரத நாள்.ஏன் நாம்  இப்படி கூறுகிறோம் என்றால் பார்வதி அம்மையார்,தெய்வானை,ராமர் சீதா மற்றும் ஆண்டாள் கல்யாணம் போன்ற தெய்வங்களின் கல்யாணம் நடந்ததால் இந்த மாதத்தை கல்யாண விரதம் என்றும் கூறுவர்.பல ஆண்களுக்கு பெண்களுக்கும் திருமணம் நடைபெறாமல் தடை பட்டுக்கொண்டே இருக்கும்.அப்படி தடை பட்டுக் கொண்டிருபவர்கள் இந்த மாதம் விரதம் இருந்தால் அதிக அளவு பயன் கிடைக்கும்.அடுத்த ஒர்ரிரு மாதத்திலே திருமணம் நடக்கும் என முநூர்கள் கூறுவர்.

இந்த விரதத்தை எவ்வாரு கடைபிடிப்பது:

இந்த பங்குனி உத்திரத்தின் போது பல ஆலயங்களில் திருக்கல்யாண வைபோவங்கள் நடைபெறும். அப்போது அங்கு சென்று அந்த கல்யாணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்கலாம்.அதாவது மாங்கல்யம் கயிறு,மஞ்சள்,குங்குமம் போன்றவற்றை கொடுப்பதன் மூலம் நமது வீட்டில் மாங்கல்ய கல்யாணம் நடக்கும் என்று ஓர் ஐதிகமே உள்ளது.இந்த பங்குனி உத்திரமனது ஆறுபடை முருகனிற்கு மிகவும் விசேஷமானது.ஏனென்றால் அசுரனை சூரா அம்சாரம் செய்ததிற்கு முருகருக்கு பரிசாக தெய்வானை கிடைத்தார்.அவர்கள் கல்யாணம் இம்மாதத்தில் தான் நடைபெற்றது.அனத்து ஆறுபடை வீடுகளிலும் இவரது கல்யாண வைபோகம் சிறப்பாக கொண்டாடப்படும்.

அதன்பின் முடிந்தவர்கள் ஆறுபடை கோவில்களுக்கோ அல்லது அருகிலிருக்கும்  கோவில்களுக்கோ சென்று பங்குனி உத்திரம் அன்று முருகரை  சந்தித்து வணங்கி வரலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டினுள்ளே முருகருக்கு  விளக்கு ஏற்றி பிரசாதமாக சக்கரை பொங்கல் செய்து வழிபடுவது மிகவும் நல்லது.இப்படி விரதம் இருப்பதால் பெண் மற்றும் மாப்பிளைக்கு கல்யாண குன நலன் கிடைக்கும்.இந்த விரதத்தை மேற்கொண்டு திருமணம் ஆகாதவர்கள் திருமண ஆக ஆசி பெற்றுக் கொல்லுங்கள்.