தந்தையும் மகனும் சேர்ந்து குடி! கடைசியில் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

Photo of author

By Kowsalya

மதுரை அருகே தந்தையும் மகனும் ஒன்றாக மது குடித்துவிட்டு பிறகு நடந்த தகராறில் தந்தையை மகன் கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை அருகே இருக்கும் ராஜகம்பீரம் என்கிற பகுதியில் வசிப்பவர் மதுபாலன். இவருக்கு வயது 44. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டாம் மனைவியுடன் இவர் வசித்து வந்திருக்கிறார். கடந்த 18ஆம் தேதி அன்று இவரது முதல் மனைவியின் மகனான மணிகண்டன் என்பவர் தந்தையை பார்ப்பதற்காக மானாமதுரையிலிருந்து ராஜகம்பீரம் என்ற பகுதிக்கு வந்துள்ளார்.

தந்தையுடன் பேசிவிட்டு பின் இருவரும் மது அருந்த சென்றிருக்கிறார்கள். இருவரும் மது குடித்துவிட்டு பின் ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரின் சண்டை கைகலப்பில் முடிந்துள்ளது. இதனால் மிகவும் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அருகில் இருந்த கல்லை எடுத்து மதுபாலனின் தலையில் அடித்துள்ளார்.

இதனால் ரத்தம் வெளிவந்த நிலையில் மதுபாலன் கிடக்க, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மதுபாலனை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மதுபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடனே காவல் துறையினர் தலைமறைவாக இருந்த மணிகண்டனை தேடி வந்துள்ளனர். பின் மணிகண்டன் மற்றும் அந்த கொலை செய்வதற்கு உறுதுணையாக இருந்த ராஜ கம்பீரம் பகுதியில் வசிக்கும் மணிகண்டனின் உயிர் நண்பன் அசோக் குமார் என்ற இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.