மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.! சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளர் பேச்சு!

Photo of author

By Jayachandiran

மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.! சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளர் பேச்சு!

Jayachandiran

ஊரடங்கு நேரத்தில் கடையை கூடுதல் நேரம் திறந்துவைத்தது தொடர்பாக தந்தையான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலைய விசாரணைக்கு பின் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது. இச்சம்பவம் தொடர்பான அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கண்டனக் குரல் எழும்பி வருகிறது. இந்த கொலைக்கு அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் பகுதிக்கு புதிய காவல் ஆய்வாளராக பெர்னாட் சேவியர் என்னும் அதிகாரி நாளை பதவியேற்க உள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது; சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக நாளை பொறுப்பேற்கிறேன். உயர் அதிகாரிகள் என்மீது நம்பிக்கை வைத்து இந்த சூழலில் என்னை நியமித்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன், பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சாத்தான்குளம் ஆய்வாளராக நல்லபடியாக செயல்படுவேன்’ என்று கூறியுள்ளார்.