வில்லிவாக்கம்: மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை

Photo of author

By Parthipan K

வில்லிவாக்கம்: மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை

Parthipan K

வில்லிவாக்கம் அருகே பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வில்லிவாக்கம் அடுத்த ரெட் ஹில்ஸ் ஐந்தாவது தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் – லாவண்யா தம்பதியினர். இருவருக்கும் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் லாவண்யா மற்றும் ராதாகிருஷ்ணன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

லாவண்யா எப்போதும் பிள்ளைகளை வீட்டில் விட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று வழக்கம் போல் லாவண்யா குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

அந்நேரத்தில் ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் அவருடைய 7 வயது மகள் வதனா ஸ்ரீ இருந்துள்ளார்.

அப்போது ராதாகிருஷ்ணன் வீட்டில் தனியாக இருந்த வதனா ஸ்ரீயிடம், மனைவி லாவண்யாவின் நடத்தையை குறித்து கேட்டுள்ளார்.

குழந்தை எதுவும் கூறாமல் அமைதியாக இருந்ததால் கோபமடைந்த ராதாகிருஷ்ணன், காய்கறி வெட்டும் கத்தியை வைத்து குழந்தையின் கழுத்தை அறுத்துள்ளார். கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த குழந்தையை பெரியார் புறநகர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர் .

பின்னர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.