ஈன்ற தந்தையே இதை செய்யலாமா? 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்!

Photo of author

By Kowsalya

தர்மபுரி காரிமங்கலம் அருகே சொந்த தந்தை தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலத்தை அடுத்த பேகாரஅள்ளி ஊராட்சியில் தொன்னையன் கொட்டாய் கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவருக்கு 37 வயதாகிறது. இவரது மனைவி தனலட்சுமி இவருக்கு வயது 28. இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். சண்முகம் மற்றும் தனலட்சுமிக்கு அடிக்கடி தகராறு வருவதாக கூறப்படுகிறது.

சண்முகத்திடம் தகராறு ஏற்படும் பொழுதெல்லாம் தனலட்சுமி இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு தாய்வீடான காவேரிப்பட்டணத்திற்க்கு சென்று விடுவார்களாம். சமாதானம் ஆன பின் மறுபடியும் வீடு வந்து சேருவாராம்.

இப்படி கடந்த 20 நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டு தாய்வீடான காவேரிப்பட்டணத்தில் இருந்துள்ளார்.

சண்டை தணியவே தனலட்சுமி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது 10 வயது மகளை தந்தை சண்முகம் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தெரிந்து தனலட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி அருகிலுள்ள பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சண்முகத்தை போலீசார் விசாரணை நடத்திய போது தன் மகளையே பாலியல் பலாத்காரம் செய்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் சண்முகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.