அப்பாவின் முடிவுதான்.. ஒதுக்கிய முக்கிய பதவி!! உதயநிதி கொடுத்த ஷாக்கிங் பிரஸ் மீட்!

Photo of author

By Rupa

அப்பாவின் முடிவுதான்.. ஒதுக்கிய முக்கிய பதவி!! உதயநிதி கொடுத்த ஷாக்கிங் பிரஸ் மீட்!

Rupa

Father's decision..reserved important post!! Shocking press meet given by Udayanidhi!

அப்பாவின் முடிவுதான்.. ஒதுக்கிய முக்கிய பதவி!! உதயநிதி கொடுத்த ஷாக்கிங் பிரஸ் மீட்!

தமிழ்நாட்டின் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட போகிறது என்று பேச்சு அடிபட்ட உடனே முதல்வரின் அடுத்த நோக்கம் அவரது மகனை அமைச்சராக்குவது தான் என்று பலரும் கூறி வந்த நிலையில் அதற்கு ஏற்றவாறு கட்சி நிர்வாகிகளும் உதயநிதி கட்டாயம் அமைச்சராக்கப்பட வேண்டியவர் தான் என்று ஆணித்தரமாக கூறி வருகின்றனர்.

அந்த வகையில் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் உதயநிதி ஸ்டாலின் ஏதோ ஒரு முக்கிய அமைச்சர் பதவியில் அமர வைக்கப்படலாம் என்று அரசியல் சுற்றுவட்டாரங்கள் பேசி வரும் இந்த சூழலில் இதனை சிறிதும் கண்டு கொள்ளாமல் படப்பிடிப்பு சட்டமன்ற வேலைகள் என்று தன்னை மிகவும் பிசியாகவே வைத்து வருகிறார்.

தற்பொழுது இவரது ரெட் ஜெயன்ட் நிறுவனம் படம் வெளியிடுவதில் முக்கியத்துவம் காட்டி வரும் நிலையில் இவரும் தனிப்பட்ட முறையில் தற்போது ரிலீசான கழகத் தலைவன் முதல் வெளிவர உள்ள மாமன்னன் கண்ணனை நம்பாதே போன்ற படங்களில் பிசியாகவே உள்ளார்.

ஒரு தனியார் ஊடகத்தில் கொடுத்த பேட்டியில் நான் இனிமேல் பணம் நடிப்பது குறைத்துக் கொள்ளப் போவதாகவும் முழு நேர பணியாக சட்டமன்ற வேலைகளை செய்யப்போவதாகவும் தெரிவித்திருந்த நிலையில் இவர் அமைச்சராக போகிறார் என்பது உறுதியானது.

அமைச்சராகிவிட்டால் அதற்குரிய பணிகள் இவருக்கு அழுத்தம் கொடுக்கும் வேலையாக இருக்கும் பட்சத்தில் இவரால் எந்த படமும் நடிக்க முடியாது. எனவே அது வைத்து தான் இவர் இனிமேல் நான் படம் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

அதேபோல திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் மான்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் நலத்திட்ட உதவிகளை கொடுத்து வழங்கிய போது அங்கிருந்த செய்தியாளர் நீங்கள் அமைச்சராக போகிறீர்கள் என்று செய்தி பரபரப்பாக வருகிறது. நீங்கள் எப்பொழுது அமைச்சர் பதவியில் அமர போகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு உதயநிதி, நான் அமைச்சராவது முதல்வர் கையில் தான் உள்ளது அவர் எடுக்கப்போகும் முடிவு தான் என்று கூறியுள்ளார்.