அப்பா கட்சிக்கும் எனக்கும் சம்மதமே இல்லை.. நான் தலையிட மாட்டேன்!! விஜய் மகன் சொன்ன கருத்து!!

Photo of author

By Gayathri

அப்பா கட்சிக்கும் எனக்கும் சம்மதமே இல்லை.. நான் தலையிட மாட்டேன்!! விஜய் மகன் சொன்ன கருத்து!!

Gayathri

Updated on:

Father's party and I do not agree.. I will not interfere!! Vijay son's opinion!!

நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்குள் நுழைந்து தங்கள் கட்சியினுடைய முதல் மாநில அளவிலான மாநாட்டினை வெற்றிகரமாக அரசியல் வட்டாரத்தில் அனைவரும் வியந்து பார்க்கும் வண்ணம் நடத்தி முடித்து விட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தன்னுடைய கடைசி படத்திலும் விஜய் அவர்கள் நடித்து வருகிறார். ஒருபுறம் அரசியல் மறுபுறம் சினிமா என தன்னுடைய பாதையினை தெளிவாக வகுத்துக் கொண்டு அதற்கான பயணத்தை இவர் துவங்கி இருக்கிறார் என்று கூறலாம்.

மேலும், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருடைய அம்மாவான “ஷோபா சந்திரசேகர்” அவர்கள் விஜய் குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு விருப்பமில்லை என்று தெளிவாக கூறிவிட்டனர் என தெரிவித்திருக்கிறார். மேலும் இவர் கூறுகையில், விஜய் அவர்களின் மகனான ஜேசன் சஞ்சய் அவர்கள் அப்பாவினுடைய அரசியலுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

விஜய் அவர்களின் மகனுக்கு சினிமா துறையில் இயக்குனராக வேண்டும் என்பதே லட்சியமாக எடுத்து தற்பொழுது படம் ஒன்றினையும் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக்கி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகனைத் தொடர்ந்து, விஜய்யினுடைய மகளான திவ்யா சாஷா லண்டனில் தன்னுடைய மேற்படிப்பினை படித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விஜய்யினுடைய குடும்பத்தில் அனைவரும் தங்களுக்கென ஒரு தனி கெரியரை தானாகவே உருவாக்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாரிசு அரசியல் குறித்த தன்னுடைய மாநாட்டில் வெளிப்படையாக பேசிய கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு, அவர்களுடைய மகனான ஜேசன் சஞ்சய் அரசியலுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.