இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஃபாவிபிராவிர் மருந்தைக் கொடுக்க அனுமதி

0
255

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஃபாவிபிராவிர் மருந்தைக் கொடுக்க அனுமதி

கடந்த டிசம்பரில் சீனாவின் வுகான் மாகானதில் பரவத் துவங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா நோயை கட்டுப்படுத்தவும், குணமாக்கவும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா இறப்பு மிகவும் குறைவு. அதற்குக் காரணம் நமது நாட்டில் மருத்துவத்துறை சிறப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளதாகும். தற்போது கொரோனாவிற்க்கு அறிகுறிகள் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஃபாவிபிராவிர் (Favipiravir) என்ற மருந்தை மருத்துவமனைகளில் கொடுத்துப் பரிசோதிக்கலாம் என இந்திய தலைமை மருந்து கட்டுப்பாளர் அனுமதி அளித்துள்ளார். மூலிகை தாவரத்திலிருந்து பெறப்படும் சத்துக்களை வைத்து இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது. ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் இன்புளூவன்சாவுக்கு இந்த மருந்து நல்ல பலனை அளித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு அதை வழங்கலாம் என்ற அனுமதி கிடைத்துள்ளதாக மத்திய அறிவியல் தொழில்துறை ஆய்வு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சேகர் மண்டே தெரிவித்துள்ளார்.

Previous articleதொடரும் கொரோனா பாதிப்பு… பீதியில் உலக மக்கள்… கிடுகிடுவென உயரும் பட்டியல்..!!
Next articleஅடித்தட்டு மக்களை கடுமையாகப் பாதிக்கும் மின்சார திருத்த சட்டம் தேவையற்றது – பாமக தலைவர் ராமதாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here