உங்களுக்கு பிடித்த நிறம் இதுவா? உங்கள் ரகசியங்களை கூறும் நிறங்கள்..!

Photo of author

By Priya

personality test with colors in tamil: நாம் எந்த ஒரு புதிய விஷயத்தை தொடங்கினாலும் அதில் நமக்கு விருப்பமான சில விஷயங்களையும், அதிர்ஷ்டமான சில விஷயங்களையும் செய்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்று நாம் எண்ணுவோம். அந்த வகையில் நாம் எதை செய்தாலும் நமக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்வதன் மூலம் நமது மனம் மகிழ்ச்சி அடைகிறது.

நாம் ஒரு கடைக்குச் சென்று ஒரு பொருளை வாங்குவதாக இருந்தால் இதுபோன்று வாங்கலாம் என்று புலம்பி இறுதியில் நமக்கு பிடித்த நிறத்தில் தேர்வு செய்து எடுத்துக்கொண்டு வருவோம். நம் வீட்டில் நமக்கு பிடித்த நிறங்களில் தான் அதிகமான பொருட்கள் இருக்கும். மேலும் ஒரு சிலர் இன்டர்வியூக்குச் செல்லும் பொழுது இந்த நிறம் ஆடை அணிந்து சென்றால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என செண்டிமெண்டாக நினைப்பதுண்டு. காரணம் அந்த நிறம் அவர்களுக்கு லக்கியாகவும், விருப்பமானதாகவும் இருக்கலாம்.

மேலும் இங்கு பலருக்கு விருப்பமான நிறம் ஒன்றாகவும், லக்கியான நிறம் ஒன்றாகவும் இருக்கலாம். குறிப்பிட்ட சிலருக்கு இரண்டும் ஒன்றாக கூட இருக்கலாம். இந்நிலையில் ஒருவருக்கு பிடித்த நிறத்தை வைத்து அவர் எப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவர் என்று பார்க்கலாம். உளவியல் ரீதியாக ஒருவருக்கு பிடித்த நிறத்தை வைத்து அவர்களின் பண்புகளை சற்று விவரிக்க முடியும்.

நீலம்

ஒருவருக்கு நீலம் நிறம் பிடிக்கிறது என்றால் அவர்கள் அமைதியான குணம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் புத்திசாலியாகவும் மன அமைதியை விரும்புவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் எண்ணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். மற்றவர்களிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதே சமயம் மற்றவர்களும் நம்மிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களுக்கு நல்ல நண்பர்கள் அமைவார்கள். மற்றவர்களின் தேவையை பூர்த்தி செய்வதில் இவர்கள் அதிக கவனம் செலுத்தி வருவார்கள்.

கருப்பு

கருப்பு நிறத்தை விருப்பமான தேர்வாக கொண்டவர்கள் தனிமையை விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் அதிகார தோணி இவர்களிடம் அதிகம் காணப்படும். ஆளுமை கண்ணியம் கட்டுப்பாடு மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இவை அனைத்தும் இவர்களுக்கு கூடுதலாகவே இருக்கும். எப்பொழுதும் மனச்சோர்வில் காணப்படுவார்கள். இவர்கள் யாரிடமும் எந்த ஒரு விஷயங்களையும் எளிதாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இவர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். மற்றவர்களும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்

வெள்ளை

வெள்ளை நிறத்தை தேர்வாகக் கொண்டவர்கள் அமைதியானவர்களாகவும், பொறுமைசாலியாகவும் காணப்படுவார்கள். இவர்கள் எப்பொழுதும் எளிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்கள் இவருக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். பேச்சு திறமை இவர்களிடம் அதிகம் இருக்கும். அதனால் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பார்கள். இவர்கள் அதிகமாக தன்னுடைய சுதந்திரத்தை விரும்புவார்கள். மற்றவர்கள் இவர்களுக்கு ஏதேனும் துரோகம் இழைத்து விட்டால் அதனை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் மிகுந்த வேதனையும் அடைவார்கள். நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

பச்சை

பச்சை நிறத்தை தேர்வாகக் கொண்டவர்கள் நிச்சயம் இயற்கையை ரசிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இயற்கை நிறைந்த சூழ்நிலை மிகவும் பிடிக்கும். புகழை விரும்பக் கூடிய நபராக இருப்பார்கள். மற்றவர்களிடம் அதிக அன்பு செலுத்தும் நபராகவும் இருப்பார்கள். இவர்கள் சுதந்திரத்தை மிகவும் நேசிக்கக் கூடியவர்கள் மற்றவர்களின் கண்களுக்கு நீங்கள் எப்பொழுதும் நல்லவர்களாகவே தென்படுவீர்கள்.

மஞ்சள்

மஞ்சள் நிறம் எப்பொழுதும் மங்களகரமானதாகவே நமது நாட்டில் கருதப்படுகிறது. அந்த வகையில் மஞ்சள் நிறத்தை தேர்வு செய்பவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் இருப்பார்கள் இவர்கள் பொறுமைசாலியாகவும், நேர்மையானவர்களாகவும், உண்மையானவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களிடம் தெரியும் தவறை உடனடியாக சுட்டிக்காட்டுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் நம்பிக்கையான மனிதராக திகழ்வார்கள். நண்பர்களுடன் இருக்கும் பொழுது வேடிக்கையான மனிதராகவும், நகைச்சுவையான மனிதராகவும், தென்படுவார்கள். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் எப்பொழுதும் இருக்கும்.

பிங்க்

பிங்க் நிறத்தை தேர்வாக கொண்டவர்கள் ரொமான்டிக்கான மனிதராக கருதப்படுவார்கள். இவர்களின் முகத்தில் எப்பொழுதும் சிறு புன்னகை தவழ்ந்து கொண்டே இருக்கும். இவர்கள் அமைதியை மிகவும் நேசிப்பார்கள். மற்றவர்களை ஊக்கமளிப்பார்கள். மற்றவர்களின் மீது அதிக அன்பு செலுத்துவார்கள். அவர்களும் தன் மீது அன்பை செலுத்த வேண்டும் என்று எண்ணுவார்கள். இவரிடம் நட்பு பாராட்டுவதற்கு அதிகமானவர்கள் விரும்புவார்கள். மிகவும் எளிமையான மனிதராக தெரிவார்கள்.

ஆரஞ்

ஆரஞ் கலர் விருப்பமான தேர்வாக கொண்டவர்கள் அதிக நண்பர் கூட்டம் பெற்றிருப்பவர்களாக திகழ்வார்கள். மற்றவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பார்கள். மிகவும் நல்ல குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து அதில் முழு கவனம் செலுத்துவார்கள். கடின உழைப்பாளிகளாக திகழ்வார்கள். மற்றவர்கள் கொடுத்த வாக்குறுதியை இவர்கள் என்றும் தவறுவதில்லை. அதேசமயம் இவர்கள் திறமையான மனிதர்களாகவும் கம்பீரமாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வார்கள்.

சிவப்பு

சிவப்பு நிறத்தை தெளிவான எண்ணங்கள் கொண்டவர்கள். மிகவும் தைரியசாலியாக திகழ்வார்கள். இவர்களிடம் அதிக தன்னம்பிக்கை இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் வேகமாகவும் முழுமையாகவும் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடத்தில் எப்பொழுதும் இருக்கும். வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பதை இவர்கள் அதிகம் விரும்புவார்கள். இவர்கள் தவறு செய்யாத பட்சத்தில் அனைவரையும் எதிர்க்கவும் தயங்க மாட்டார்கள்.

ஊதா

ஊதா நிறத்தை தேர்வாக கொண்டவர்கள் எப்பொழுதும் விலை உயர்ந்த பொருட்களின் மீது தனி ஆர்வம் இவர்களுக்கு இருக்கும். தான் இப்பொழுதும் தனித்துவமாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடத்தில் அதிகமாகவே காணப்படும். இவர்கள் நம்பிக்கை உடையவர்களாக மற்றவர்களின் பார்வைக்கு தெரிவார்கள். மற்றவர்களிடமிருந்து இவர்கள் தனியாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடத்தில் அதிகமாகவே காணப்படும். இவர்கள் புத்திசாலியாக விளங்குவார்கள்.

கிரே

கிரே கலரை விருப்பமான தேர்வாக கொண்டவர்கள் அமைதியான சூழ்நிலையை விரும்புவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஒழுக்கம் தான் முக்கியம் என்று வாழ்வார்கள். மற்றவர்களின் நம்பிக்கை உரிய மனிதராக திகழ்வார்கள். மேலும் இவர்கள் மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

மேலும் படிக்க: நீங்கள் எந்த கிழமையில் பிறந்தீர்கள்? அப்போ உங்கள் குணாதிசயம் இதுதான்..!