மீண்டும் மீண்டும் ஏற்பட்ட நில அதிர்வுகள் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம்! 

Photo of author

By Amutha

மீண்டும் மீண்டும் ஏற்பட்ட நில அதிர்வுகள் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம்! 

துருக்கியின் மத்திய பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்படும் நில அதிர்வுகளால் மேலும் உயிர்பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தென்கிழக்கு துருக்கியில் நேற்று அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5000 மக்கள் உயிரிழந்தனர். அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்ததால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்தது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நேற்று மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

துருக்கியின் மத்திய பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 நிலநடுக்கம் பதிவானதாக மத்திய தரைக்கடல் நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேற்று(பிப்.6) மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலில் நேற்று  7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மாலையில் மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது.  இதையடுத்து நான்காவது முறையாக 5.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இரு நாடுகளிலும் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. ஐந்தாவது முறையாக மீண்டும் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமி குலுங்கியதால் சீட்டு கட்டுகள் போல் கட்டிடங்கள் இடிந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கட்டிட இடைபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 5000 பேர் உயிரிழந்த நிலையில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதால் உயிர் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவின் அண்டை நாடான லெபனானில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் அங்கு கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை பெய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.