நீட் தேர்வு பயம்! துயரமான அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள்: ஸ்டாலின் விடுத்த அதிரடி அறிக்கையால் தமிழக மக்கள் வரவேற்பு

Photo of author

By Parthipan K

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு முன்னதாக நீட் எனும் புதிய தேர்வினை பாஜகவினால் அறிமுகப்படுத்தப்படடது. இந்த நீட் தேர்வினை எழுதினால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதற்காக தற்போது வரை நாடு முழுதும் கல்வியாளர்களும், அறிஞர்களும், பெற்றோர்கள்,மாணவர் சங்க அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை.

 

இதனால், மாணவர்களுக்கு நீட் தேர்வு பற்றிய பயத்தினால் தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் பல திறமை வாய்ந்த மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலம் தொடர்கிறது.

இன்று(செப். 13) நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி துர்கா, நேற்று அதிகாலை ஒரு மணிவரை படித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துயர சம்பவம் நடந்துள்ள நிலையின் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில், இன்று நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தருமபுரி மாணவர் ஆதித்யா என்பவர் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

நீட் தேர்வு எழுத இரண்டாம் முறையாக விண்ணப்பித்திருந்த நிலையில் மாணவர் ஆதித்யா தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. உருக்கமான கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

 

இந்த அடுத்தடுத்த நிகழ்ந்த மிகத் துயரச் சம்பவங்கள் நடந்தேறிய நிலையில், நேற்று இரவு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோதிலால் என்ற மாணவர், நீட் தேர்வு குறித்த அச்சத்தினால் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என வந்த செய்தியால் தமிழகமே தோய்ந்துபோய் உள்ளது. நீட் தேர்வு குறித்த அச்சம் இதுவரை 7 உயிர்களை காவு வாங்கியுள்ளது.

இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்காக கூறியதாவது, “மாணவர்களே, தைரியமாக இருங்கள்! உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்!

 

திமுக ஆட்சியில் நீட் இரத்து செய்யப்படும். வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும். எந்தப் போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும்; இது உறுதி!” என்று தெரிவித்துள்ளார்.

 

திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பிற்க்குப் பிறகு பல தரப்பிலிருந்தும் பலத்த வரவேற்பு கிடைத்துவருகிறது. நீட் தேர்வு பயத்தினால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் உள்ளவர்களுக்கு இது சற்று ஆறுதலாக இருக்கும் என கல்வியாளர்கள், உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.