மத்திய அரசின் எச்சரிக்கை கடிதம்! கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் மாநில அரசு!
கொரோனா தொற்றானது முதல் அலை இரண்டாம் அலை கடந்து தற்போது மூன்றாவது அலை நடைபெற்று வருகிறது.இதனை அறிந்த மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கோவாக்சின் மற்றும் கோவிட் ஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்பொழுது மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில மக்கள் இன்றளவும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர்.தற்பொழுது தான் இரண்டாம் கட்ட பாதிப்பானது சற்று குறைந்து காணப்படுகிறது.
இந்த சூழலில் தீபாவளி ,கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்த வர உள்ளது.இச்சமயம் மக்கள் எந்த ஒரு கொரோனா தொற்றின் விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் பொது இடங்களில் நடந்துகொள்வர்.அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.இந்த கடிதத்தில் கூறியிருப்பது, இந்தியாவில் தற்பொழுது தான் கொரோனா தொற்றின் பாதிப்பானது குறைந்து வருகிறது இருப்பினும் சில மாநிலங்களில் அதிகரித்து காணப்படுகிறது.இச்சமயங்களில் மக்கள் பண்டிகை நாட்களில் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருப்பர்.
அதனால் மக்கள் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் வகையில் மாநில அரசு அனைத்தும் விதிமுறைகளை கடுமையாக வேண்டும் என்று கூறியுள்ளனர். மக்கள் அனைவரும் தொற்றின் எச்சரிக்கை உணர்ந்து பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.இந்தத் திருவிழாக்களில் தவிர்க்க முடியாமல் பலருக்கு நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகுவர்.அதனால் மாநில அரசுகள் அனைத்தும் பாதிப்படைந்தவர்களுக்கு முன்கூட்டியே மருத்துவமனை வசதி ஐசியு ,படுக்கை வசதி, போன்றவற்றை முன் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.மக்கள் அனைவரிடமும் பரிசோதனை போன்றவை தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்.மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மேல் அதிக கவனம் செலுத்தி அவர்கள் செலுத்த வைக்க வேண்டும்.அதைப்போல தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டது.