ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சில முக்கிய அறிவிப்புகளையும் அறிவித்துள்ளது மத்திய கல்வி அமைச்சகம்.
கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் சிபிஎஸ்சி மாணவர்களின் பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழக பாடத்திட்டத்திலும் மாணவர்களுக்கு 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழ்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டின் ஜேஇஇ நீட் தேர்வு போல் இல்லாமல், இந்த ஆண்டில் ஜேஇஇ நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினாக்களை தேர்ந்தெடுத்து விடையளிப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2021 ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கேட்கப்படும் 90 கேள்விகளில் ஏதேனும் 75 கேள்விகளுக்கு மட்டும் விடை அளிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.