மத்திய அரசியன் அடுத்த அப்டேட்! விவசாயிகளுக்கு மட்டும் தனித்துவமான அடையாள அட்டை! இதற்காகத்தானா!

Photo of author

By Rupa

மத்திய அரசியன் அடுத்த அப்டேட்! விவசாயிகளுக்கு மட்டும் தனித்துவமான அடையாள அட்டை! இதற்காகத்தானா!

தற்பொழுது மத்திய அரசு விவசாயிகளுக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.அதில் சில குறிப்பிட்ட திட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிப்பதில்லை.அந்தவகையில் விவசாயிகள் பயிரடப்படும் பொருட்களுக்கு கார்பரேட் நிறுவனங்கள் விலையை நிர்ணயிப்பது போன்றவற்றை எதிர்த்து அனைவரும் தொடர்ந்து போராடி தான் வருகின்றனர்.அந்தவகையில் தற்போது விவசாயிகளுக்கென்று 12 இலக்கு அடங்கிய தனித்துவமான அடையாள அட்டையை கொண்டு வர திட்டம் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.இந்த செய்தியானது மத்திய அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த அடையாள அட்டையை கொண்டு வருவதன் மூலம் விவசாயிகள், தற்பொழுது எந்த திட்டங்கள் நடைமுறையில் உள்ளது என்பதை கண்டுகொள்ளலாம்.அதுமட்டுமின்றி அனைத்து விவசாயிகளை ஒருகினைப்பதே இதன் நோக்கம் என கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி விவசாயிகள் தடையின்றி தங்களுக்கு தேவையான கடன் தொகைகள் மற்றும் விவசாயம் சார்ந்த திட்டங்கள் பயன்படுத்த இந்த திட்டம் வழிவகுக்கும் என கூறியுள்ளனர்.அதேபோல விவசாயிகள் பயிரிடப்படும் பொருட்களை கொள்முதல் செய்ய இந்த அட்டை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உதவிபெறும் என கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி விவசாயிகளின் மத்திய அரசின் திட்டங்களான பிஎம் கிசான் மற்றும் பிஎம் பாசல் பீம யோஜன போன்ற திட்டங்களின் தரவுகளை இந்த அட்டையுடன் இணைப்பதாக மத்திய அரசு கூறி வருகின்றனர்.மேலும் இந்த தரவுகளை நில பதிவுகளுடன் பதிவிடப்படும் என்றும் கூறுகின்றனர்.இந்த மத்திய அரசின் திட்டங்களின் இணைப்புடன் ,நில தரவு இணைப்பானது மத்திய பிரதேசம்,ஆந்திரா,உத்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

தெலுங்கான,பஞ்சாப்,கேரளா போன்ற இதர மாவட்டங்களில் நாளடைவில் நடைமுறைக்கு வரும் என கூறியுள்ளனர்.விவசாயிகளுக்கான அட்டையானது 8 கோடி விவசாயிகளின் தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்ட பிறகு இந்த தனித்துவமான அடையாள அட்டை திட்டம் கொண்டுவரப்படும் என கூறியுள்ளனர்.இந்த அட்டை கொண்டு வருவதனால் பின்னணி நோக்கம் ஏதேனும் உள்ளதா என்பதும் நாளடைவில் தெரிய வரும்.