திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதற்கான கட்டணம் உயர்வு! பக்தர்கள் கடும் அவதி!

Photo of author

By Parthipan K

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதற்கான கட்டணம் உயர்வு! பக்தர்கள் கடும் அவதி!

Parthipan K

Fee hike for this in Tirupati Esummalayan Temple! Devotees suffer a lot!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதற்கான கட்டணம் உயர்வு! பக்தர்கள் கடும் அவதி!

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அதிகளவு அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் மக்கள் அதிகளவு செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான்.பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.கடந்த புரட்டாசி மாதம் முழுவதும் பக்தர்கள் அதிகளவு வர தொடங்கினார்கள் அதனால் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி ,சொர்க்க வாசல் திறப்பு போன்ற நாட்களில் பக்தர்கள் அதிகளவு வர தொடங்கினார்கள்.இந்நிலையில் அண்மையில் திருப்பதியில் பக்தர்கள் தாங்கும் விடுதிக்கான கட்டணம் உயர்தப்பட்டது.மேலும் தற்போது வரை நாளொன்றுக்கு 30 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.திருப்பதி தரிசனக் கட்டணங்களில் தேவஸ்தானம் எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லை.இருப்பினும் திருமலையில் உள்ள பல தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் மட்டும் பலமடங்கு அதிகரித்துள்ளது குறிப்பித்தக்கது.