தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணம் குறைப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறையின் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு வார காலமாக ஒவ்வொரு துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில் இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் என்பவர் தனது தொகுதியில் பாலிடெக்னி கல்லூரி இல்லாததால் புதிதாக பாலிடெக்னிக் கல்லூரி நிறுவ வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.
அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 570 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது. இதில் பெரும்பான்மையாக மாணவர்களின் சேர்க்கை குறைவாகவே காணப்படுகிறது. அதனால் தற்பொழுது புதிய ஐந்து பாடத்திட்டங்களை நிறுவ உள்ளதாக கூறினார். மேலும் இது குறித்து மாணவர்களுக்கு தக்க பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல பாலிடெக்னிக் படித்தவர்களால் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர முடியாது என்ற ஒன்று இருந்தது.
தற்பொழுது அது மாற்றம் செய்யப்பட்டு பாலிடெக்னிக் படிக்கும் அனைவரும் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரிகளில் சேரமுடியும் என கூறி உள்ளார். மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணம் குறைக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார். இதனை தமிழக அரசு ஏற்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணம் குறைக்கப்பட்டால் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் அந்த வகையில் இவ்வாறான கோரிக்கையை தமிழக அரசை நோக்கி வைத்துள்ளார்.