தொடர்கிறதா பெண் சிசுக்கொலை!! ஆதாரத்துடன் பிடித்த சுகாதாரத்துறை!!

0
3
Female infanticide continues!! Favorite healthcare with evidence!!
Female infanticide continues!! Favorite healthcare with evidence!!

தர்மபுரி, கள்ளக்குறிச்சியில் சமீபமாகவே பெண் சிசுக்கொலை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்திருந்தன. இதனை தடுத்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையிலான குழு ரகசியமாக ரோந்து பார்த்து வந்துள்ளது. இக்குழுவினர் திடீரென்று இன்று கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் உள்ள வ.உ.சி நகரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு அவர்கள் கருக்கலைப்பு செய்யும் கும்பலை கையும், களவுமாக பிடித்துள்ளனர். கூடவே, அங்கு குழந்தையின் பாலினம் கண்டறியும் இரண்டு ஸ்கேன் மிஷின்களையும் கைப்பற்றியுள்ளனர். கருக்கலைப்பு செய்த நபர்கள் தப்பி ஓடும்போது பிடிக்க முயற்சித்ததில் சுகாதாரத் துறையினருக்கு சிறிது காயம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்

மேலும் இணை இயக்குனர் சாந்தி பேசுகையில், சுற்று வட்டாரத்தில் ஒரு பெண் குழந்தையை கூட பிறக்க விடமாட்டீர்களா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அதற்கு பிடிபட்ட ரஞ்சித் தம்மை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்துவராக கூறியுள்ளார். அவர்கள் சொன்னால் நீ செய்வீயா? குண்டர் சட்டம் உன் மேல் பாயும் என்பது தெரியாதா? என தொடர்ந்து பேசிய சாந்தி, நீ பண்ணுவதெல்லாம் எங்களுக்கு தெரியும். டீடெயில்ஸ் எல்லாம் தெரிஞ்சுட்டு தான் உன்னை கையும் களவுமாக பிடித்து இருக்கிறோம் என்றார். அதற்குப் பின் அந்த இடத்தை அப்புறப்படுத்தி அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். மேலும், தப்பிச் சென்ற இன்னொரு நபரையும், இடைத்தரகரையும் போலீசார் தேடி வருகின்றனர். சாந்தி அவர்களின் முயற்சியை பெரும்பாலானோர் தொடர்ந்து பாராட்டி வருகின்றன.

Previous articleஅடுத்தது திரிஷாவின் அரசியல் எண்ட்ரி!!சினிமாவை விட்டு விலக முடிவு!!
Next articleஅட இதுக்கு கூட ஐஸ்வர்யா தான் காரணமா!!கடுப்பான தனுஷ்!!