கணக்கெடுப்புக்கு சென்ற பெண் அதிகாரி! தரதரவென்று இழுத்து சென்ற பரிதாபம்!

Photo of author

By Hasini

கணக்கெடுப்புக்கு சென்ற பெண் அதிகாரி! தரதரவென்று இழுத்து சென்ற பரிதாபம்!

Hasini

Female officer who went to the survey! Awful dragged out of the standard!

கணக்கெடுப்புக்கு சென்ற பெண் அதிகாரி! தரதரவென்று இழுத்து சென்ற பரிதாபம்!

மராட்டியத்தில் சந்திரபூர் மாவட்டத்தில் தடோபா அந்தாரி என்ற புலிகள் சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. இதில் வன அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சுவாதி தூமனே. இந்த பெண் அதிகாரி புலி கணக்கெடுப்பு பணிக்காக 3 உதவியாளர்களுடன் இன்று காலை 7 மணி அளவில் அடர்ந்த வனத்திற்குள் சென்றார்.

அங்கு சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ளே சென்று விட்டனர். அப்போது அங்கு அந்த சாலையின் மீது பெண் புலி ஒன்று அமர்ந்திருந்தது. இதனை 200 மீட்டர் தொலைவில் இருந்தே  அதிகாரிகள் கவனித்தனர். அதன் பின் அரை மணி நேரம் அங்கேயே காத்திருந்தனர். புலி எழுந்து செல்வதாக தெரியவில்லை என்று அவர்கள் வேறு வழியின் பக்கமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்ல முயற்சி செய்தனர்.

ஆனால் அந்நியர்கள் யாரோ உள்ளார்கள் என அறிந்த அந்தப் பெண் புலி அவர்கள் பக்கம் திரும்பியது. அவர்களை துரத்திச் சென்றது. 3 உதவியாளர்கள் முன்னே செல்ல அவரும் அவர்களை பின்தொடர்ந்து உள்ளார். இருந்த போதிலும் புலி அந்த பெண் அதிகாரியை பிடித்து காட்டுக்குள் இழுத்துச் சென்று விட்டது. அதனால் அதனை தொடர்ந்து வன பணியாளர் உதவியுடன் உயிரிழந்த அதிகாரியின், உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் அனைத்தும் உடனடியாக வழங்கப்பட்டது என்று முதன்மை வனக்காப்பாளர்  ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.