செல்போன் கடைக்காரருடன் ரகசிய உறவை வளர்த்த பெண் போலீஸ்! மனைவி செய்த அடாவடி செயல்!

0
171
Female police officer develops secret relationship with cell phone shopkeeper! Wife's abusive act!
Female police officer develops secret relationship with cell phone shopkeeper! Wife's abusive act!

செல்போன் கடைக்காரருடன் ரகசிய உறவை வளர்த்த பெண் போலீஸ்! மனைவி செய்த அடாவடி செயல்!

கரூர் மாவட்டம் செல்லாண்டி பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு ஏழு வருடங்களுக்கு முன்பே வனிதா என்பவருடன் திருமணம் முடிந்துவிட்டது. 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கரூர் பேருந்து நிலையம் அருகில் கார்த்திக் ஒரு செல்போன் பழுது பார்க்கும் கடையை திறந்துள்ளார். இந்நிலையில் அங்கு ஒரு பெண் போலீஸ் அடிக்கடி அவரது கைப்பேசி பழுது பார்க்க வர ஆரம்பித்து உள்ளார்.

அதன் காரணமாக அவர்களுக்குள் கல்யாணத்தை தாண்டிய உறவு ஒன்று வளர ஆரம்பித்துள்ளது. அவர் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் கவுசல்யா ஆகும். இந்நிலையில் அவர்களின் தகாத உறவை கடையிலேயே வலுவாக்கி உள்ளனர். பலநாட்கள் அவரும் கடையிலேயே தங்கி விடுவாராம். அதன் பிறகு வீட்டிற்கு இரவில்  தாமதமாக வந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக மனைவி அவரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்த போது ஏதோ ஒரு காரணத்தை சொல்லி மழுப்பி வர ஆரம்பித்தார்.

அதற்கு அவர் மேல் சந்தேகம் வந்த மனைவி கேள்வி கேட்டால் வேலை அதிகமாக இருந்தது என்று ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லி கொண்டே நாட்களை கடத்தி வந்தார். இதனால் சந்தேகம் வலுத்த மனைவி ஒருநாள் கடைக்கு நேரில் சென்று பார்த்தபோது, இப்படி ஒரு தகாத செயல் அங்கே நடப்பது தெரியவந்து அதிர்ந்து போனார். மேலும் அப்போது அங்கு பணிபுரியும் கடை ஊழியரிடம் இதுபற்றி கேட்டபோது, இது அவ்வப்போது நடக்கும் ஒரு விஷயம் தான்.

அடிக்கடி இது போன்று நடக்கின்றது என்று கூறியுள்ளார். எனவே வனிதா இது பற்றி கணவரிடம் விட்டு விடும்படி பேசியுள்ளார். ஆனால் கணவரோ அதை கண்டுகொள்ளவே இல்லை. அதன் பின்னும் இந்த தொடர்பு தொடரவே வனிதா கடையில் வைத்தே கணவருடனும் அந்த பெண் போலீசிடமும் வாக்குவாதம் நடத்தியுள்ளார். உடனே கணவர் மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிச் சென்று விட்டார். ஆனாலும் அவரது உறவைத் தொடர்ந்து வந்துள்ளனர்.

அதன் காரணமாக ஒருநாள் வனிதா கணவருக்கு தகவல் சொல்லாமலேயே கடைக்குச் சென்று பார்த்த போது மீண்டும் அதே கள்ள உறவில் அவர்கள் ஈடுபட்டிருந்தது கண்டு பிடித்தாள். போலீஸின் சீருடைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கும் வந்து விட்டார். இதை அறிந்தவர்கள் பதறிப்போய் மாற்று உடை போட்டு வீட்டு அருகே வந்து பிரச்சினை செய்தனர். அப்போது அக்கம்பக்கத்தினர் அங்கு கூடி கொள்ளவே சத்தம் போடாமல் அங்கிருந்து நகர்ந்து கொண்டார் கௌசல்யா.

வனிதா கொண்டு சென்றது அவருடைய சீருடை அல்லவா எனவே பதட்டம் இருக்க தானே செய்யும். அந்த பதட்டத்தில் தான் வீட்டின் அருகே வந்து ரகளை செய்து இருக்கிறார்கள். ஆனால் கூட்டம் கூடி விடவே என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்து நழுவி ஓடிவிட்டார் பெண் காவலர். அதன் காரணமாக செல்போன் கடைக்காரரின் மனைவி வனிதா அந்த சீருடையை எடுத்துக்கொண்டு பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுக்க சென்று இருந்தார்.

ஆனால் புகார் காவலர் மீது என்பதன் காரணமாக அங்கு அந்த புகாரை அங்கு எடுத்துக் கொள்ளவில்லை. எனவே வனிதா தன் தாய், தந்தையுடன் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வனிதா, அவர் என் கணவர், ஆயுதப்படை போலீசாருடன் உள்ள தொடர்பை நிரூபிக்கவே போலீசாரின் சீருடையை நான் எடுத்து வைத்துக் கொண்டேன். அங்கு உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கும்போது அவர்கள் அதை சட்டை செய்யவே இல்லை.

அதன் காரணமாக இங்கே வந்து புகார் மனு கொடுத்துள்ளேன். இதற்கு தீர்வு காணவே நான் இங்கு வந்துள்ளேன் என்றும் கூறினார். அதேபோல அந்தப் பெண் காவலரும் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றது. இந்நிலையில் வேறு ஒரு நபருடன் இப்படிப்பட்ட ஒரு உறவில் இருப்பதன் காரணமாக கரூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Previous articleதசரா விழா அடுத்த மாதம் கோலாகல ஆரம்பம்! முதல்வர் முன்னிலையில் உயர்மட்ட கூட்டம்!
Next articleவேறு பெண்ணுடன் மணிக்கணக்கில் அரட்டை அடித்த கணவன்! ஹோட்டல் அதிபரின் மனைவி மற்றும் மகள் செய்த பதைபதைக்க வைத்த காரியம்!