FIFA: உலகக் கோப்பை கால்பந்து போட்டி! அடுத்த சுற்றிற்கு தேர்வான இரண்டு அணிகள்! 

Photo of author

By Parthipan K

FIFA: உலகக் கோப்பை கால்பந்து போட்டி! அடுத்த சுற்றிற்கு தேர்வான இரண்டு அணிகள்!

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்று இரவு தோகாவில் உள்ள லூசைல் ஸ்டேடியத்தில் சி பிரிவு லீக் ஆட்டம் நடைபெற்றது.அதில் போலந்து மற்றும் அர்ஜென்டின அணிகள் மோதியது.

இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக தொடங்கியது.முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. அதனை தொடர்ந்து இரண்டாவது பாதியின் 46 வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் கோல் அடித்தார் அதனால் அவருடைய அணி முன்னிலை வகித்தது.

அதற்கு பிறகு 67 வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரெஸ் ஒருகோல் அடித்தார்.அப்போது அர்ஜென்டினா அணி  வெற்றியை உறுதி செய்தது. கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் போலந்து அணியால் கோல் எதுவும் பெற முடியவில்லை.

அதன் பிறகு ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று முதலாவது இடத்தை பிடித்தது.அதே போல போலந்து அணி இரண்டாம் இடம் பிடித்தது.சி பிரிவில் இடம்பெற்ற இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.