FIFA: உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரசிகர்களுக்கு எச்சரிக்கை! தொடர்ந்து பரவி வரும் மெர்ஸ் நோய் தொற்று!
உலகம் முழுவதிலும் கொண்டாடும் விளையாட்டு திருவிழாவில் ஒன்றாக இருப்பது உலகக்கோப்பை கால்பந்து போட்டி. பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைநடத்தப்படும்.கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடத்தப்பட்டது.அதில் பிரான்ஸ் அணி வெற்றி கோப்பையை தட்டி சென்றது.
மேலும் தற்போது கத்தார் நாட்டில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த போட்டியை சுமார் 10 லட்சத்திற்கு அதிகமான பார்வையாளர்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கால்பந்து போட்டி தொடங்கி 10 நாட்கள் ஆன நிலையில் உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அதில் மெர்ஸ் எனப்படும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்பட்ட கூடிய சுவாச பாதிப்பு ,ஒட்டக காய்ச்சல் என கூறப்படுகிறது.
மேலும் இந்த காய்ச்சல் கொரோனாவை விட கொடியது என கூறப்படுகிறது.இந்நிலையில் கத்தாரில் 28 பேருக்கு மெர்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.இவர்களில் பலர் ஒட்டகத்துடன் தொடர்புடையவர்கள் என புள்ளி விவரம் கூறுகிறது.
இந்த நோய் ஒட்டக பாலை காய்ச்சாமல் பச்சையாக குடிப்பது ,ஒட்டகத்தின் சிறுநீரை குடிப்பது மற்றும் அவற்றின் இறைச்சியை முறையாக சமைக்காமல் உண்பதனால் தான் ஏற்படுகிறது.
மெர்ஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல் ,இருமல் மற்றும் சுவாச பிரச்சனை ஆகிய அறிகுறிகள் காணப்படும் என தெரிவித்துள்ளனர்.இதனால் மத்திய கிழக்கு பகுதியில் அமைந்த கத்தார் நாட்டில் நடைபெறும் பிபா கால்பந்து உலக கோப்பையை காண சென்றுள்ள ரசிகர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.