பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! இரு நாடுகளுக்கு இடையே ஆட்டம் டிரா!
கால்பந்து உலகக் கோப்பை இதுவரை மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கவில்லை.உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறுவதால் போட்டிகளை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் கத்தார் முதல்முறையாக உலகக் கோப்பை கால்பந்து தொடருக்குத் தேர்வாகி உள்ளது.
நேற்று முன்தினம் உலகின் மிகப்பெரிய கால்பந்து தொடரான இதன் தொடக்க விழா தொடங்கியது.இந்த நிகழ்ச்சி இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கியது.இந்த போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கும் நிலையில் அவை 8 பிரிவாக்கப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றது.
மேலும் கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் ஆட்டம் தொடங்கியது.அதில் அமெரிக்கா ,வேல்ஸ் அணிகள் மோதியது.
ஆட்டத்தின் தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய அமெரிக்க அணி முதல் பாதியின் 36 வைத்து நிமிடத்தில் அமெரிக்க அணியின் திமுதி வியா ஒரு கோல் அடித்தார்.அப்போது முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என முன்னிலை வகித்து ஆட்டத்தை தொடர்ந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 82 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வேல்ஸ் வீரர் பாலே அபாரமாக கோலாக மாற்றினார்.இறுதியில் இரு அணிகளும் இடையிலான ஆட்டத்தில் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.