பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! இன்று மோதி கொள்ளும் அணிகள்!
உலக கோப்பை கால்பந்து போட்டி என்பது உலகின் மிகப்பெரிய வியாட்டுகளில் ஒன்றாக உள்ளது.இந்த போட்டி முதன்முதலில் 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகின்றது.
இந்த போட்டியானது கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்தது அதில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.இந்நிலையில் தற்போது உலக கால் பந்து போட்டி இந்த ஆண்டில் கத்தார் நாட்டில் நடைபெறுகின்றது.அந்த வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா மற்றும் வேல்ஸ் நாட்டிற்கு இடையிலான ஆட்டத்தில் 1-1 என்று ஆட்டம் டிராவில் முடிந்தது.
மேலும் இன்று 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.அவை இந்திய நேரப்படி 3.30 மணிக்கு தொடங்கியுள்ளது.இதில் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றது.இந்த அணிகள் நான்கு சர்வதேச போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடி இருப்பது குறிப்பிட்ட தக்கது. மேலும் டி பிரிவில் மாலை 6.30 மணிக்கு தொடங்க உள்ள ஆட்டத்தில் டென்மார்க் மற்றும் துனிசியா அணிகள் மோதுகின்றது.
இந்த இரண்டு அணிகள் மோதியுள்ள ஒரு ஆட்டத்தில் டென்மார்க் அணி வெற்றி பெற்றுள்ளது.இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் மெக்சிகோ மற்றும் போலந்து அணிகள் விளையாடுகின்றன.அதனையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும் மோதுகின்றது.