பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! விளையாட்டு சேனல் தொகுப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல்!

Photo of author

By Parthipan K

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! விளையாட்டு சேனல் தொகுப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல்!

மதபோதகர் ஜாகீர் நாயக் மதச் சொற்பொழிவுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது கத்தார் நாட்டில் நிகழும் பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நிகழவுள்ளதாக கத்தார் அரசுக்கு சொந்தமான அல்காஸ் என்ற விளையாட்டு சேனல் தொகுப்பாளர் பைசல் அல்ஜாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜாகீர் நாயக் ,மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் மும்பையில் பிறந்தவர்.இவர் புனித பீட்டர் பள்ளி மற்றும் கிஷின்சந்த் செல்லாராம் கல்லூரியிலும் படித்தார்.அதனையடுத்து இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை படித்தார்.ஆனால் மருத்துவர் தொழிலை விரும்பாமல் மார்க்கப் பணிகளில் அவர் அதிகம் ஆர்வம் செலுத்தினார்.

அதனையடுத்து 1991 ஆம் ஆண்டு தாவா என்ற மதரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.தாவா என்பது இஸ்லாமிய மதத்தை பிறரை தழுவச் செய்யும் பணியாகும்.மேலும் விளையாட்டு சேனல் தொகுப்பாளர் பைசல் அல்ஜாரி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் மத போதகர் ஷேக் ஜாகீர் நாயக் கத்தார் நாட்டிற்கு வந்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து அவர் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் முடிவு பெறும் வரையில் அவர் மத சொற்பொழிவுகள் நடத்துவார் என பதிவிட்டிருந்தார்.அரசு ஊடகத்துறை அதன் ட்விட்டர் பிபா உலகக் கோப்பையையொட்டி தலை சிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான டாக்டர் ஜாகீர் நாயக் கத்தார் வந்துள்ளார்.