FIFA :உலகக் கோப்பை கால்பந்து! அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ அணி மோதல்!
உலக கோப்பை கால்பந்து போட்டி என்பது உலகின் மிகப்பெரிய விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது.இந்த போட்டி முதன்முதலில் 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடத்தப்படுகின்றது.
அந்த வகையில் இந்த போட்டியானது கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்தது.அதில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.இந்நிலையில் தற்போது உலக கால் பந்து போட்டி இந்த ஆண்டில் கத்தார் நாட்டில் நடைபெறுகின்றது.
இரு தினங்களுக்கு முன்பு நடந்த போட்டியில் அர்ஜென்டீனா அணியை சவூதி அரேபியா தோற்கடித்தது.முதல் ஆட்டத்தில் தோற்றதால் தற்போது நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது.நாளை அதிகாலை நடைபெறும் ஆட்டத்தில் மெக்ஸிகோவை எதிர்கொள்கிறது.அர்ஜென்டினா அணி மீண்டும் வர வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.அர்ஹென்டினாவிற்கு உழைக்க கோப்பை வென்று தரும் தனது கடைசி முயற்சியில் இருக்கும் 35 வயது மெஸ்ஸி இந்த ஆட்டத்தில் நிச்சயம் விளையாடுவார் என கூறப்படுகின்றது.
இந்த உலகக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் 0-0 என போலாந்துக்கு எதிராக டிரா செய்தது மெக்ஸிகோ .அதனால் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தாலும் போட்டியிலிருந்து வெளியேறாது.